Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்

நடிகர் விஜய் அதிரடி – எனது தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்றுல அவரது ரசிகர்கள் கடந்த பல நாட்களாக போஸ்டர் ஓட்டி வந்தனர். மேலும் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டதாக செய்திகள் வெளியாயின•

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள‍து.

இதுகுறித்து நடிகர் விஜய்-ன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் கேட்ட‍போது, அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன் என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இது என்னுடைய தனிப்பட்ட‌ முயற்சி என்றும் இது விஜய்யின் அரசியல் கட்சி அல்ல எனவும் கூறினார்.

இந்நிலையில் திடீரென்று நடிகர் விஜய், ஓர் அறிக்கை ஒன்றை தொலைக்காட்சிகள் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில் மேற்படி கட்சிக்கும் விஜய் மக்க‍ள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், எனது தந்தையே கட்சித் தொடங்கினாலும் அந்த கட்சியில் சேரவோ பணியாற்ற‍வோ வேண்டாம் என்றும் தெரிவிதுள்ளார்.

#நடிகர், #விஜய், #தளபதி, #எஸ்_ஏ_சந்திரசேகர், #அகில_இந்திய_தளபதி_மக்கள்_இயக்கம், #விதை2விருட்சம், #Actor, #Vijay, #S_A_Chandrasekar, #Thalapathy, #Thalapathi, #Agila_India_Thalapathy_Vijay_Makkal_Iyakkam #Agila_India_Ilaya_Thalapathy_Vijay_Makkal_Iyakkam, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply