Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

உப்பின் சிறப்பை உணர்த்தும் விதமாக, ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’! என்ற பழமொழி இன்றளவும் வழக்கில் உண்டு. அந்த உப்பு என்ற உபபொருள் ருசிக்காக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்காகவும் சேர்ப்பது உண்டு.

ஆனால் அதே உப்பு அளவுக்கு அதிகமானால்… அதனால் ஆரோக்கிய கேடுகள் பல நமக்கு உண்டாகும். பதப்படுத்தப்பட்ட‍ அல்லது ஜங்க் உணவுகள் அல்லது சாதாரணமாக சாப்பிடும் உணவு வகைகளில் உப்பை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால்… நாளடைவில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு உங்கள் எலும்புகள் அத்தனையும் வலுவிழந்து நடப்பதற்கும் உட்காருவதற்கும் மிகுந்த சிரமத்தை ஏற்டுத்தி விடும். அதுமட்டுமல்ல நமது உடலுக்குள் உள்ள‍ சிற்றெலும்புகள் மிகுந்த தேய்மானம் அடைந்து அதீத பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆகவே அதிக உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுபவராக நீங்கள் இருந்தால் தயவுசெய்து உப்பை பெயரளவுக்கு சேர்த்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்.

சமூக அக்கறையுடன்
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி 98841 93081

#உப்பு, #சால்ட், #எலும்பு, #கால்சியம், #குறைபாடு, #அதிக_உப்பு, #உணவு, #விதை2விருட்சம், #Salt, #Bone, #Calcium, #Deficiency, #Excess_Salt, #Food, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: