Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி தொடக்கம் – ரசிகர்கள் உற்சாகம்

க‌டந்த பல ஆண்டுகளாக ரஜினி, தான் அரசியலுக்கு வருவது குறித்து சொல்லி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதன்பிறகு பின்வாங்குவது போல் இருந்தார். மேலும் இவரது இந்த குழப்பமான முடிவு பல ரசிகர்களின் மத்தியில் சோர்வையும், சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்நிலையில் கடந்த வாரம் இராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தான் கட்சித் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறி சென்றார்.

இந்நிலையில் இன்று (03.12.2020) நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் – ரஜினிகாந்த் அறிவிப்பு

ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்

#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப் படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். *** அற்புதம்… அதிசயம்… நிகழும் ***

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த டிவிட்டர் பதிவு வெளிவந்த சில மணி நேரங்களில் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடிய வில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்.

#Rajini_Politics #Rajinikanth #ரஜினி_அரசியல் #ரஜினிகாந்த் #Rajini #Politics #Rajnikanth #ரஜினி #அரசியல் #ரஜினிகாந்த் #ரஜினி_அதிரடி_ஜனவரியில்_க‌ட்சி_தொடக்கம்_ரசிகர்கள்_உற்சாகம் #விதை2விருட்சம்,#vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: