Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட

1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – “நா குடிக்க‍ப்போற அதா கேட்ட”

மஞ்சள் என்பது அழகுக்கு மட்டுமல்ல‍ நமது ஆரோக்கியத்திற்கும் சிறந்த மாமருந்து இது நமது பழந்தமிழர் நமக்கு விட்டுச்சென்ற அற்புதமான, ஆச்சரியமான வரம் என்றே சொல்லலாம். அத்தகைய மஞ்சளில் தேநீர், அதாவது டீ தயாரித்து குடித்து வந்தால் என்ன‍ மாதிரியான ஆரோக்கியத்தை நமது உடலுக்கு பதிவேற்றும் என்பது இங்கை காணலாம்.

ந‌மது உடலில் பித்த நீர் இன்றியமைதாய ஒன்று இது சுரப்பதால் தான் நம‌து உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவல்ல திரவம் ஆகும். அத்தகை திரவம் சிலருக்கு குறைந்தளவு சுரக்கும் இதன் காரணமாகவும் அவர்களின் உடல் எடை அதிகரித்து சிற்சில நோய்களுக்கு வித்திடும். ஆகவே அதுபோன்றவர்கள், மஞ்சள் டீ தயாரித்து குடித்து வந்தால், அவர்களின் வயிற்றில் சுரந்து கொண்டிருக்கும் பித்த நீரின் அளவை அதிகரிக்க உதவும். இதனால் உடலில் உள்ள‍ கெட்ட கொழுப்பு கரைந்து விடுகிறது. கெட்ட கொழுப்பு கரைவதால் உடல் எடையும் கணிசமாக குறைய வாய்ப்பு அதிகம் உண்டு.

மேலும் கல்லீரலின் எல்லா செல்களையும் பாதுகாத்து, கல்லீரலை நன்றாகவும் சிறப்பாகவும் செயல்பட உதவுகிறது. மேலும் உங்களுக்கு பித்தபை கற்கள் பிரச்சனை இருந்தால் இந்த மஞ்சள் டீ சிறந்த மருந்தாகிறது. அதுமட்டுமல்ல இந்த‌ மஞ்சள் டீயை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் வீக்கங்களும் குறையும் என்கிறார்கள் விவரம் அறிந்த மருத்துவர்கள்.

#1_கப்_மஞ்சள்_டீ_உங்களுக்கு_வேணுமா?_-_நா_குடிக்க‍ப்போற_அதா_கேட்ட, #மஞ்சள்_தேநீர், #மஞ்சள்_டீ, #கல்லீரல், #பித்த_நீர், #கொழுப்பு, #உடல்_எடை, #விதை2விருட்சம், #Would_you_like_a_glass_of_turmeric_tea?_-_I_am_going_drinking_That’s_what_just_I_heard, #Turmeric_Tea, #Turmeric, #Liver, #bile, #fat, #body_weight #obesity #vidhai2virutcham, #vidhaitovirucham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: