Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌

பெண்களே! உங்க‌ வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் அதீத வலியா? – உடனே கவனிங்க‌

குடும்பத்தில் உள்ள‍ அத்துணை பேரின் ஆரோக்கியம் சீர்குலையாமல் கண்ணும் கருத்துமாக இருந்து, சமைக்கும் உணவிலும் சரி, ஏதேனும் சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் உடனே ஓடி வந்து அதற்கான தீர்வுகளை கண்டு, பாதுகாப்பவர்கள் யாரென்று கேட்டால் அது பெண்கள்தான். ஆனால் அந்த பெண்கள், தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அதனை உடனடியாக கவனிக்காமல் தனக்கு தெரிந்த எளிய மருத்துவத்தை செய்து தற்காலிக தீர்வுகளுடன் சங்கடப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். ஆகவே இந்த பதிவு பெண்களுக்கான மிக முக்கியப் பதிவு ஆகும்.

வயிற்றின் வலது பக்கத்தில் கடுமையான வலியை திடீர் திடீரென்று அனுபவிக்கும் பெண்களா நீங்கள்? அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய வலி தொப்புளை சூழ்ந்து தொடங்கும். பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றின் கீழ் பகுதி யில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரக கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று போக்கு, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு எடை குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அது செரிமான அமைப்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் ‘க்ரோன்’ நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆதலால் வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

#வாந்தி, #மலச்சிக்கல், #வயிற்றுப்போக்கு, #தொப்புள், #அறிகுறி, #வயிறு, #வயிற்றின்_வலது_பக்க‍ம், #குடல்_அழற்சி, #பெண்களே_உங்க‌_வயிற்றின்_வலது_பக்க‍த்தில்_திடீர்_அதீத வலியா?_-_உடனே_கவனிங்க, #விதை2விருட்சம், #Vomiting, #Constipation, #Diarrhea, #Navel, #Symptoms, #Stomach, #Right_Side_of_the_Stomach, #Inflammation, #Sudden_Excessive_Pain_In_The_Right_Side_Of_Your_Stomach?_-_Notice_immediately, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: