Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)

ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்த‍தும் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍து. (இது விதை2விருட்சம் பதிவு).

எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍தேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவில் சில வீடுகளில் அழுகுரல். அதே (இது விதை2விருட்சம் பதிவு) தெருவில் வசிக்கும் எனது நண்பருக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு காரணம் கேட்ட‍போது 25 நாட்களுக்கு முன்பு என் வீட்டுக் கதவை தட்டிய அதே உருவம் தான் இவர்கள் வீட்டுக் கதவை தட்டியதாம், (இது விதை2விருட்சம் பதிவு) கதவு தட்டியதும் வீட்டுக்குள் இருந்தவர்கள் கதவை திறந்ததும் சட்டென அவர்களின் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்து நடு வீட்டில் அமர்ந்து விட்டதாம். அந்த உருவம் வந்த பிறகுதான் முதலில் அந்த வீட்டின் குடும்பத் தலைவர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவ மனையில் உள் நோயாளி அனுமதிக்க‍ப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாராம். அதன்பிறகு அவரது தந்தை பாதிக்கப் பட்டாராம். இப்போது அந்த குடும்பத் தலைவன் இறந்து விட்டார். அவரது (இது விதை2விருட்சம் பதிவு) இழப்பைத் தாங்க முடியாமல் அந்த குடும்பமே கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது. இதேபோல் அடுத்த‍ வீட்டிலும் நிகழ்ந்ததுள்ள‍தாக அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இன்னும் சிலர் மருத்துவ மனையில் தான் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அவர்கள் பூரண நலம் பெற மனதார பிரார்த்தனை செய்தேன்.

8 (எட்டு) மாதங்கள் கழித்து, சாலையில் நான் போய்க்கொண்டிருக்கும் எதிர்பாராத விதமாக என்னைப் பார்த்து பயந்து ஓடிய அந்த உருவத்தை பார்த்தேன். அந்த உருவமோ மரணத்தின் வாசல் படியில் இருந்து துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த‌தும் அப்ப‍டியே அதனிடம் சென்று, அன்று என் வீட்டிற்கு வந்து கதவை தட்டி விட்டு, நான் கதவை திறந்ததும் என்னைப் பார்த்ததும் பயந்து அலறி ஓடிப் போனாயே அது ஏன் என்று கேடேன். அதற்கு அந்த உருவம், பேச முடியாமல் பேசத் தொடங்கியது. (இது விதை2விருட்சம் பதிவு) அன்று எங்கள் தெருவில் வசிக்கும் சிலரது வீடுகளின் கதவுகளை தட்டி அந்த வீட்டில் உள்ள‍வர்களின் உயிர்களை பறித்ததாக சொல்கிறார்களே அது உண்மையா? ஆமாம், உங்கள் தெருவில் வசிக்கும் சிலரது வீடுகளின் கதவை தட்டினேன் ஆனால் அவர்களில் சிலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி சிறிதும் இன்றி (இது விதை2விருட்சம் பதிவு) என்னிடம் நெருக்க‍மாக நின்று, (இது விதை2விருட்சம் பதிவு) என்னை நேருக்கு நேராக பார்த்து பேசினர். நானும் அவர்களிடம் உள்ளுக்குள் வஞ்சம் வைத்து நட்பானேன். அதன்பிறகாவது அவர்கள் கைகளையும் முகத்தையும் சோப்பு போட்டு கழுவினார்களே என்றால் இல்லை. அதனால்தான் அவர்களின் உயிரை பறித்தேன் என்றது.

சரி அன்று உங்கள் வீட்டுக்கதவை (இது விதை2விருட்சம் பதிவு) நான் தட்டியது உண்மைதான். ஆனால் நீங்களோ கதவை திறக்கும்போதே வாயையும் மூக்கையும் முகக் கவசம் கொண்டு மூடிக் கொண்டு, கையில் கிருமி நாசினி (சானிட்டைசர்) வைத்திருந்தீர்கள். மேலும் நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக எனது நண்பன் எனக்கு அப்போதுதான் குறுஞ்செய்தி எனது கைபேசிக்கு அனுப்பி யிருந்தான். அதனால்தான் (இது விதை2விருட்சம் பதிவு) உங்களைப் பார்த்தும் பயந்து அலறி ஓடிப்போனேன். சரி, இவ்வ‍ளவு பேசுகிறாயே நீ யார்? உன் பெயர் என்ன என்று கேட்டேன். அதற்கு அந்த உருவம், நான் ஒரு நுண்ணுயிரி. எனது பெயர் கொரோனா என்றது. எனக்கு பதில் உரைத்த‍ அடுத்த‍ நிமிடமே, பல லட்சம் உயிர்களை பலிவாங்கிய‌ அந்த கொரோனா நுண்ணுயிர் மரணம் அடைந்துவிட்டது.

இது வெறும் கற்பனை கதையல்ல, நாம் காட்டும் அலட்சியம் நமது உயிர்களை மட்டுமல்ல‍ நம்முடைய அன்பானவர்களின் உயிர்களையும் பலி கொடுக்கிறோம் என்பதை உணர்ந்து, மூக்கையும் வாயையும் சேர்த்து முகக் கவசம் அணிந்தும், (இது விதை2விருட்சம் பதிவு) சோப்போ அல்ல‍து கிருமிநாசினியையோ கொண்டு கைகளை அடிக்கடி கழுவியும், தேவைக்கு வெளியே சென்றாலும் சமூக இடைவெளிவிட்டு நின்று பொருட்கள் வாங்க வேண்டும். மேலும் (இது விதை2விருட்சம் பதிவு) அரசு அறிவித்துள்ள‍ தடுப்பூசியை முறையாக செலுத்திக்கொண்டு வீட்டிலேயே நாமிருந்தால் கொரோனா கொடூரமாக சாவது உறுதி.

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி 9884193081

கொரோனா, #நுண்ணுயிரி, #வைரஸ், #இருமல், #தடுப்பூசி, #தும்ம‍ல், #தொற்று, #சளி, #நுரையீரல், #கோவித்19, #சமூக_இடைவெளி, #முகக்கவசம் #கிருமிநாசினி, #வாய், #மூக்கு, #கோவேக்ஸின், #கோவிஷீல்டு, #விதை2விருட்சம், #corona, #virus, #cough, #vaccine, #infection, #cold, #lungs, #covid19, #social_distance, #mouth, #nose, #covaxin, #covisheild, #vaccination, #mask, #mouth, #nose, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: