Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்

முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்

வாரிசு அரசியலில் வந்தவர் என்றும் ஏதும் அறியாதவர் என்றும் மேடை பேச்சில் தடுமாறுபவர் என்றும் சுடலை என்றும் அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது என்றும் முதல்வர் ஆவதற்கு இராசியில்லாதவர் என்றும் கலைஞரைப் போல் இவர் இல்லை என்றும் இன்னும் என்னென்னமோ வார்த்தைகளால் திரு. மு க ஸ்டாலின் அவர்களைப் பற்றி அவரது அரசியல் எதிரிகள் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கேலி செய்தும், இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். ஆனால் முதல்வர் முக ஸ்டாலினும் மிரள வைக்கும் தகவல்களும் என்ற தலைப்பில் உள்ள‍ இந்த கட்டுரையை படித்தீர்களென்றால் மு க ஸ்டாலின் யாரென்று தெரியும். அவரது சிறப்பு என்ன‍ என்பதும் தெரியும்.

மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலராக இருந்தவருமான அஷோக் வர்தன் ஷெட்டி, (ஓய்வுபெற்ற‍ ஐ.ஏ.எஸ்) இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கிறார்…

பல முதலமைச்சா்கள் கோப்புகளை பார்த்து, கையெழுத்திட தாமதம் செய்வார்கள். ஆனால், மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை கோப்புகளை மிக வேகமாக பார்த்து ஒப்புதல் அளிப்பார். மு.க. ஸ்டாலின் வந்தால், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் வருமோ என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், 2006 முதல் 2011வரை குடும்ப உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின் தன் அலுவலகத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தார்” என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி…

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறார் அசோக் வர்தன். ஒரு முறை மு.க.ஸ்டாலினின் துறையில் பணியாற்றிய அவருடைய நெருங்கிய உறவினரை, ஒரு தவறுக்காக இடைநீக்கம் செய்து கோப்பை மு.க.ஸ்டாலினிடம் அனுப்பினார் ஷெட்டி. மு.க. ஸ்டாலின் எந்தக் கேள்வியும் கேட்காமல், அந்தக் கோப்பில் கையெழுத்திட்டார் என்கிறார் அவர்….

மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை அவர் செய்த பணிகளுக்கான பெயர் அவருக்குக் கிடைக்கவில்லை. 2006-2011க்குள் தமிழ்நாட்டில் இருந்த 12,500 கிராமங்களிலும் நூலகம், கிராமப்புற விளையாட்டு மையம், சுடுகாடுகள் அமைக்கப்பட்டன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை கிடையாது. அதை உள்ளாட்சித் துறை அமைச்சராக ஐந்தாண்டுகளில் செய்தார் ஸ்டாலின். ஆனால், அதற்கான பெருமை அவருக்குக் கிடைக்கவில்லை” என்கிறார் ஷெட்டி…

மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார் ஷெட்டி. 2006 – 11 காலகட்டத்தில் உலக வங்கியின் உதவியுடன் 717 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் `வாழ்ந்து காட்டுவோம்’ என்ற பெயரில் 16 மாவட்டங்களில் சுமார் 2,500 கிராமங்களில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன்களை வழங்கி சுய மேம்பாட்டிற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்

2010ல் இத்திட்டத்தை ஆய்வு செய்த உலக வங்கி, தாங்கள் உலகம் முழுவதும் செயல்படுத்தி வரும் திட்டங்களில், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் இதுதான் என கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்த உலக வங்கியின் தலைவர் நடாஷா ஹோவர்ட் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பாராட்டினார். இதனை யாரும் கண்டு கொள்ள வில்லை. ஒரு சிறிய செய்திக் குறிப்பாக இந்த நிகழ்வு சென்று விட்டது என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டமும் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது தான். தமிழ்நாட்டில் இருந்த 12,500 கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் 2,500 கிராமங்கள் தேர்வு செய்து திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் தங்கள் கிராமத்தை அந்த வருட பட்டியலில் சேர்க்க கட்சிக்காரர்கள் முயல்வார்கள். ஆனால், மிக ஏழ்மையான கிராமங்களில் இருந்து, வசதியான கிராமங்கள் என்ற வரிசையில் கிராமங்களைத் தேர்வு செய்து திட்டத்தைச் செயல்படுத்துவதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கும் போது, பொதுவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் உள்ள பஞ்சாயத்துகள் சிறப்பாக செயல்பட்டாலும் அவற்றுக்கு விருதுகள் வழங்க மாட்டார்கள். அமைச்சர்கள் விருது பட்டியலை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் பட்டியலில் இல்லை என்பதை உறுதி செய்வார்கள். ஆனால், மு.க. ஸ்டாலின் சரியான பஞ்சாயத்துகள் விருதுகளைப் பெறுவதை உறுதி செய்தார் என்கிறார் அசோக் வர்தன்.

மு.க. ஸ்டாலின் எனும் த‌ளபதி, தலைவரானது எப்ப‍டி – முழு வீடியோ

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார் அவர். மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, கோயம்புத்தூரில் மேட்டுப் பாளையத்திற்கு அருகில் இருந்த ஒரு பஞ்சாயத்து மிகச் சிறப்பாக செயல் பட்டிருந்தது. அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளரின் எதிர்ப்பையும் மீறி, அந்தப் பஞ்சாயத்தைச் சென்று பார்வையிட்டார் மு.க. ஸ்டாலின். அந்த ஆண்டு விருது பெற்ற 15 பஞ்சாயத்துத் தலைவர்களின் பட்டியலில் அந்த பஞ்சாயத்துத் தலைவரின் பெயரும் இருந்தது. அவர் அமைச்சராக இருந்த போது அ.தி.மு.கவைச் சேர்ந்த பல பஞ்சாயத்துத் தலைவர்கள் மாநில விருதுகளுக்கும், மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் ஷெட்டி…

ஆனால், இதையெல்லாம் மீறி அவர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டார். பல சமயங்களில் பேசும் போது வார்த்தைகள் தவறுவதை வைத்து கேலி செய்தார்கள். இருந்த போதும், இது போன்ற முத்திரைகள் இந்திய அளவில் பலித்ததைப் போல தமிழ்நாட்டில் பலிக்கவில்லை… ஸ்டாலினை தொடர்ந்து தாக்குவதற்கும், கேலி செய்வதற்கும் காரணம், அவருடை சித்தாந்த நிலைப்பாடு தான். மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், இந்தி எதிர்ப்பு ஆகியவற்றில் அவர் உறுதியாக இருக்கிறார். இந்த சித்தாந்தங்களுக்கு எதிராக ஏதாவது சொன்னால், மாட்டிக் கொள்வோம் என்பதற்காகத்தான் அவரைக் கேலி செய்கிறார்கள். இப்படி கேலி செய்பவர்கள், மத்திய – மாநில உறவு, மதச்சார்பின்மை ஆகியவை குறித்து என்ன நிலைபாடு எடுத்தார்கள் என்று பார்த்தால் அவர்கள் ஏன் மு.க.ஸ்டாலினை நோக்கி இந்த அவதூறுகளைச் சொல்கிறார்கள் என்பது புரியும் என்கிறார் பத்திரிக்கையாளர் திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வன்….

அவரை தத்தி என்று சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது மு.க. ஸ்டாலின் மீதான அப்பட்டமான காழ்ப்புணர்வு தான். ஒருவர் தொடர்ச்சியாக தன் பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்தினாலும் அவரை கேலி செய்கிறார்கள் என்றால் அது காழ்ப்புணர்ச்சியல்லாமல் வேறு அல்ல. அவர் தனக்கு கொடுத்த பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றி யிருக்கிறார். அவரை இவ்வாறு குறிப்பிடுவது முழுக்க முழுக்க சாதி சார்ந்த வன்மம்” என்கிறார் ஆழி செந்தில்நாதன்…

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவர் கூட்டணியை உருவாக்கியபோது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுக்கிறார்கள் என விமர்சித்தார்கள். சட்டமன்றத் தேர்தலில் குறைவாகக் கொடுத்தபோது, மிகக்குறைவாகக் கொடுப்பதாக விமர்சிக்கிறார்கள். ஆனால், இரண்டு தேர்தல்களிலுமே வெற்றி கிடைத்திருக்கிறது. இருந்த போதும் விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஆழி செந்தில்நாதன்….

சிறப்பாக பேசும் தலைவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படியல்ல. அதிகாரிகள் அளிக்கும் ஆலோசனைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அரசியல் ரீதியாக எது சரியாக வரும் என்று யோசித்து முடிவெடுப்பவர்களே சிறந்த தலைவர்கள். அதன்படி, காமராஜர், கோ.சி.மணி ஆகியோரின் வரிசையில் மு.க. ஸ்டாலினைச் சொல்லலாம்” என்கிறார் அசோக் வர்தன்….

2026ல் மு.க. ஸ்டாலின் தன் பதவிக்காலத்தை முடிக்கும்போது இந்தியாவின் சிறந்த ஐந்து முதல்வர்களில் அவரும் ஒருவராக இருப்பார் என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி…

நன்றி- முரளிதரன், ஊடகவியலாளர்…

Diwa பதிவின் வழியாக…through whatsapp

#முகஸ்டாலின், #முஸ்டாலின், #ஸ்டாலின், #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின், #அசோக்_வர்தன்_ஷெட்டி, #உள்ளாட்சி, #அமைச்ச‍ர், #முதலமைச்ச‍ர், #முதல்வர், #தமிழ்நாடு, #ஒன்றியம், #மோடி, #திமுக, #திராவிட_முன்னேற்ற‍க்_கழகம், #விதை2விருட்சம், #விதைவிருட்சம், #MKStalin, #M_K_Stalin, #Stalin, #Muthuvel_Karunanidhi_Stalin, #Ashok_Vardhan_Shetty, #Home_Ministry, #Minister, #Chief_Minister, #CM, #TamilNadu, #Union, #Indian_Union_Government, #Modi, #DMK, #Dravida_Munnettra_Kazhagam, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seedtotree,

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: