Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசியல்

உதயநிதி ஸ்டாலின் –  இளைஞரணி செயலாளராக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் – இளைஞரணி செயலாளராக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் - இளைஞரணி செயலாளராக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக இளைஞரணி செயலாளராக பல ஆண்டுகளாக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உதயநிதிக்கு இளைஞரணி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்னணியினர் வைக்கத் தொடங்கினர். திருச்சி, நாமக்கல் மாவட்ட திமுகவினர் இது தொடர்பாக திமுக தலைமைக்கு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பிவைத்தார்கள். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இளைஞர் அணிச் செயலாளராக இருந்த வெள்ளைக் க
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் – அமமுகவுக்கு பெப்பே, அதிமுகவுக்கு டாடா

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் – அமமுகவுக்கு பெப்பே, அதிமுகவுக்கு டாடா

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் - அமமுகவுக்கு பெப்பே, அதிமுகவுக்கு டாடா அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்து கொண்டே அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்த தங்க தமிழ்ச்செல்வன், விரைவில் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி அவரை திமுக பக்கம் இழுக்க செய்த முயற்சிகள் பலனளித்ததன் விளைவாக தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. தங்க தமிழ்செல்வன், நாளை காலை திமுகவில் இணைய உள்ளதா கவும் இதனையடுத்து தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள், தேனியில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்து வந்து கொண்டி ருப்பதாகவும், நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் தங்க தமிழ்செல்வன் தன்னை இணைத்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தங்க தமி
அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் - கோபத்தின் உச்சியில் டிடிவி தினகரன் டிடிவி தினகரன் தலைமையிலான‌ அமமுக நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியபிறகு இந்த இடம் தேறாது என பலரும் கட்சி மாறி வருகின்றனர். தேர்தல் முடிவு வெளியான போதே தங்க• தமிழ்செல்வன், சொந்த சாதிகாரன் கூட அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து.அதிமுகவை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தையும் விமர்சிப்பதை படிபடியாகக் குறைத்துக் கொண்டார். மேலும் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் இனி இங்கே இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதாலும் அதிமுகவில் இணைய தூது விட்டு வருவதாக கூறப்பட்டது. அங்கே அவருக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் அல்ல‍து தேனி மாவட்ட‍ செயலாளர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்று தருவதாக உறுதி அளித்துள்ள‍னராம். இதனைத் தொடர்ந்தே
உதயநிதி ஸ்டாலின் – கட்சிப் பதவியா? – மூன்று படங்களில் ஹீரோவா?

உதயநிதி ஸ்டாலின் – கட்சிப் பதவியா? – மூன்று படங்களில் ஹீரோவா?

உதயநிதி ஸ்டாலின் - கட்சிப் பதவியா? - மூன்று படங்களில் ஹீரோவா? உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து, நண்பேன்டா, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இவரது பிரசாரம் சாதாரண மக்களை கவரும் வகையில் இருந்தது. உதய நிதியின் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக தி.மு.க. மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர். மேலும் கட்சியின் முக்கிய பதவியான இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் வெள்ளக் கோவில் சாமிநாதன் தாமாகவே முன்வந்து இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா ச
மு.க. ஸ்டாலின் எனும் த‌ளபதி, தலைவரானது எப்ப‍டி  – முழு வீடியோ

மு.க. ஸ்டாலின் எனும் த‌ளபதி, தலைவரானது எப்ப‍டி – முழு வீடியோ

மு.க. ஸ்டாலின் எனும் த‌ளபதி, தலைவரானது எப்ப‍டி - முழு வீடியோ க‌டந்த ஆகஸ்டு மாதம் திராவிட கழகத்தின் தலைவரும், இந்தியாவின் மூத்த‍ அரசியல்வாதியும், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைந்தார். கலைஞ்ர் உடல்நலம் பாதிக்க‍ப்பட்டு இருக்கும்போது செயல் தலைவராக இருந்த திரு.மு.க• ஸ்டாலின் அவர்கள், கலைஞரின் மறைவுக்குப்பிறகு திராவிட முன்னேற்ற‍க் கழகத்தின் தலைவராக தொண்டர்களின் ஏகோபித்த‍ ஆதரவுடனும் கரகோஷத்துடனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க‍ப் பட்டார். அதுவரை தளபதியாக இருந்து வந்த திரு. மு.க• ஸ்டாலின், தலைவராக அவதாரம் எடுத்தார். அதன் வீடியோ பதிவு இங்கே கீழே காணலாம். https://www.youtube.com/watch?v=AygjXd1W_pg https://www.youtube.com/watch?v=cs7yO_MA6f8 திராவிட முன்னேற்ற‍க் கழகம், திமுக, முக•ஸ்டாலின், ஸ்டாலின், கலைஞர், கருணாநிதி, தலைவர், கலைஞர், விதை2விருட்சம்,
8 வழிச்சாலை –  தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி - அதிர்ச்சியில் தமிழக அரசு 8 (எட்டு) வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து சரமாரியாக கேள்விகளையும் கேட்டு தமிழக‌ அரசையும் முதல்வர் எடப்பாடியாரையும் அதிர்ச்ச்க்கு உள்ளாக்கியுள்ள‍து. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 (எட்டு) வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன
பிரதமர் உட்பட 58 அமைச்ச‍ர்களும் அவர்களின் இலாக்காக்களும்

பிரதமர் உட்பட 58 அமைச்ச‍ர்களும் அவர்களின் இலாக்காக்களும்

பிரதமர் உட்பட 58 அமைச்ச‍ர்களும் அவர்களின் இலாக்காக்களும் முறைப்படி நேற்று மோடி ஜீ 2-ம் முறையாக இந்தியாவின் பிரதமர் ஆனார். நேற்று இரவு ராஷ்ட்ரபதி பவன் மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 6000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டார்கள். பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில், 57 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்கள். இவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கப்படுகின்றன. மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு என்பதைத் தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் மக்கள். தற்போது மோடியின் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்கள் குறித்த முழு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முழுவிபரம் இங்கே… பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தித்துறை, விண்வெளித் துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங் – பாதுகா
15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ
வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌

வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌

வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌ மதிமுக பொதுச்செயலாளரும், சிறந்த பேச்சாளருமான திரு. வைகோ அவர்கள், க‌டந்த சில ஆண்டுகளாக மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். திரு.வைகோ அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று… இதற்கு உதாரணமாக சட்ட‍சபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற கூட்டணி கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தது. இந்தகூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் திரு.வைகோ. வைகோ இருந்ததால்தான் கூட்டணி படுதோல்வியைத் தழுவியதாகவும், வைகோ ராசியில்லாதவர் என்ற தப்பான சென்டிமெண்ட்டோடு கேலிகளும் கிண்டல்களும் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தார். அப்போதும் பல மீம்ஸ்கள் இவரை கிண்டல் செய்து பரப்ப்ப்பட்டு வந்தன• ஆனால், தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத
மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் - முட்டை கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் - களேபரம் கமல் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் மீது பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேர் அழுகிய முட்டை மற்றும் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த தொண்டர்கள், முட்டைவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சியில் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தாம் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே" என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கமலின் நாக்கை வெட்டணும்' என்று பேட்டி கொடுத்தார்.