Sunday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க!

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க!

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க பாலில் இருந்து கிடைப்ப‍து தயிர் அந்த தயிரில் தண்ணீர் கலந்தால் கிடைப்ப‍துதான் இந்த மோர். அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த‍ அற்புதமான அருமையான பரிசு. அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த‍ அற்புதமான அருமையான பரிசு. இந்த மோரை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள‍ அதீத வெப்ப‍த்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த மோரை தினமும் குடிப்பதுமட்டுமன்றி உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மீது தடவி வர வேண்டும். இதனை தினமும் செய்வதைவிட ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் பலன் கிட்டும். இதன்மூலம் உங்கள் பருக்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறைந்து.உங்கள் முகம் இழந்த பொலிவை மீண்டும் அதைவிட பன்மடங்கு கூடும். #மோர்,. #பட்ட‍ர்மில்க், #தயிர், #பரு, #பிம்ப்புள், #தண்ணீர், #விதை2விருட்சம், #Buttermilk, #More, #Thayir, #Curd, #
கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு

கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு ஒப்பனை (மேக் அப் / Make Up)க்கு முக்கியத்துவம் கொடுப்ப‍தில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்பதில் எள்ள‍ளவும் எவருக்கும் ஐயமிருக்க‌ இருக்க வாய்ப்பு இல்லை. அத்தகைய பெண்கள் முதலில் கவனம் செலுத்துவது கண்களில் தான். அந்த கண்களுக்கு அழகு தருவது அடர்த்தியான, மெண்மையான புருவங்கள். இதே இந்த புருவங்களில் முடி (மயிர்) இழப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது புருவ முடி வளர்ச்சி குறைவாக இருந்தாலோ அது கண்களின் அழகை கெடுத்துவிடும். ஆகவே அந்த புருவத்தை அடர்த்தியாகவும் மென்மையாக பராமரித்து, அதன் அழகை கூட்டுவதற்கு இதோ ஓர் எளிய வழி. வெங்காயத்தின் சாற்றை எடுத்து புருவத்தில் மென்மையாக தேய்த்து, மெதுவாகவும் இதமாகவும் மசாஜ் செய்து, சுமார் 60 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுத்தாலே போதும். இந்த வெங்காய சாற்றில் உள்ள வேதிப்பொ
1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட

1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட

1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? - "நா குடிக்க‍ப்போற அதா கேட்ட" மஞ்சள் என்பது அழகுக்கு மட்டுமல்ல‍ நமது ஆரோக்கியத்திற்கும் சிறந்த மாமருந்து இது நமது பழந்தமிழர் நமக்கு விட்டுச்சென்ற அற்புதமான, ஆச்சரியமான வரம் என்றே சொல்லலாம். அத்தகைய மஞ்சளில் தேநீர், அதாவது டீ தயாரித்து குடித்து வந்தால் என்ன‍ மாதிரியான ஆரோக்கியத்தை நமது உடலுக்கு பதிவேற்றும் என்பது இங்கை காணலாம். ந‌மது உடலில் பித்த நீர் இன்றியமைதாய ஒன்று இது சுரப்பதால் தான் நம‌து உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவல்ல திரவம் ஆகும். அத்தகை திரவம் சிலருக்கு குறைந்தளவு சுரக்கும் இதன் காரணமாகவும் அவர்களின் உடல் எடை அதிகரித்து சிற்சில நோய்களுக்கு வித்திடும். ஆகவே அதுபோன்றவர்கள், மஞ்சள் டீ தயாரித்து குடித்து வந்தால், அவர்களின் வயிற்றில் சுரந்து கொண்டிருக்கும் பித்த நீரின் அளவை அதிகரிக்க உதவும். இதனால் உடலில் உள்ள‍ கெட்ட கொழுப்பு கரை
8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை

8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை

8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை... வெந்தயம் என்பது எளிதில் கிடைக்க‍க் கூடிய மா மருந்து… இந்த அற்புத மருந்தில் நோய்களை அழித்து எதிர்ப்புச் சக்தியை கூட்டுகிறது. அந்த வகையில் ஒன்றினை இங்கு காண்போம். 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை ஒரு பருத்தியிலான‌ துணியில் வைத்து மூடி அதன் பிறகு மீண்டும் சிலமணி நேரம் அப்படியே விட்டு விட்டால் அது நன்றாக முளை கட்டி விடும். அந்த முளைகட்டிய வெந்தயத்தை நன்றாக அரைத்து கஞ்சி காய்ச்சி அதில் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் அது ருசியாக இருப்பதுடன் உடலில் ஏற்பட்ட வலி மற்றும் சோர்வு அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். #வெந்தயம், #நோய்_எதிர்ப்புச்_சக்தி, #கஞ்சி, #வெல்லம், #முளை_கட்டிய_வெந்தயம், #விதை2விருட்சம், #Dill, #Immunity, #Porridge, #Jaggery, #Sprouted_Dill, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்

இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்

இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம் என்னதான் நாம் சருமத்தின் அழகை பேணிக் காத்தாலும், சில சமயங்களில் சருமத்தின் நிறம் மாறி கருமையாக காணப்படும் அந்த வகையில் உள்தொடையில் உண்டாகும் கருமை நிறம் என்பது தொடையின் அழகை சீர்குலைக்கும் விதமாக இருப்பதால் பலருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்த குறையை போக்க உதவும் எளிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக‌... கொஞ்சம் நல்லெண்ணெயும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து உள்தொடையில் கருமை உள்ள இடத்தில் நன்றாக தடவி ஒரு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். அந்த 10 நிமிடங்கள் கழித்து சாதாரணமாக நீங்கள் குளிப்பது போல் குளித்து விட வேண்டும். இவ்வாறே அன்றாடம் நீங்கள் செய்து வந்தால் உள்தொடையின் உண்டான அந்த கருமை நிறம் மாறி நல்லதொரு மாற்றம் தெரியும் என்கிறார்கள் அழகை பேணிக்காத்த அந்த காலத்து இளம்பெண்கள். #அழகு, #கருமை, #நல்லெண்
வெந்தயப் பேஸ்ட் –  இத தடவுங்க

வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க

வெந்தயப் பேஸ்ட் - இத தடவுங்க சமையல் அறையில் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு பொருள்தான் வெந்தயம். அந்த வெந்தயத்தில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன• ஆகவே இந்த வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி புருவத்தை அழகு படுத்துவது என்பதை இங்கு சுருக்கமாக காண்போம். முதல் நாள் இரவில் வெந்தயத்தை த‌ண்ணீரில் ஊறவைத்து பின் அடுத்த நாள் அதை நைஸாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து புருவங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.. இதன் மூலமாக‌ புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தருவதோடு இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் அடர்த்தியாகவும் பொலிவாகவும் கவர்ச்சியாகவும் வளர்ந்து உங்கள் கண்களின் அழகை மென்மேலும் மெருகூட்டும். #வெந்தயம், #வெந்தயப்_பேஸ்ட், #புருவம், #அழகு, #கண்கள், #விதை2விருட்சம், #Dill, #dill_paste, #eyebrows, #beauty, #eyes, #seed2tree, #see
நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. சரியான தூக்கம் இல்லை. மன அமைதி இல்லை எந்நேரமும் மன அழுத்தம், மேலும் வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் மன சோர்வு ஆகியவற்றால் சில ஆரோக்கியகேடுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு கீழே கருவளையம். இந்த கருவளையத்தை போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு. க‌வர்ச்சியான கண்களுக்கு கீழே கருவளையம் வந்துவிட்டால் அது கண்களின் அழகை கெடுத்து விடும். அதுபோன்ற நேரங்களில் இரவு தோறும் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு கண்களைச் சுற்றி நெய் சிறிது எடுத்து தடவி வாங்க• அப்புறம் பாருங்க, கருவளையத்தால் அழகை இழந்த உங்கள் கண்கள், பளிச்சிடும், பளபளக்கும், கவர்ச்சியாகும். #நெய், #கருவளையம், #கண், #கண்கள், #மன_ஆழுத்தம், #தூக்கமின்மை, #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Ghee, #Black_Circle, #Eye,
உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க முகமும் சருமமும் எப்போதும் பிரைட்டாக இருந்தால்தான் கண்பவர்கள் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம். அது எப்படி சாத்தியம் என்பதன் சுருக்கமான வழிமுறை இதோ ஒரு பெரிய டம்ளரில் வழிய வழிய‌ புளித்துப்போகாத மோர்-ஐ தினந்தோறும் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வ‌ந்தால் பெண்களே உங்கள் முகத்தில், சருமத்தில் இயல்பாகவே பொலிவான அழகு மேன்மையடையும் அதுமட்டுமல்ல இது உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் எப்போதும் பிரைட்டாக வைத்திருக்க உதவுமாம். மேலும் இந்த மோர் குறிப்பை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் இனி உங்கள் முகத்தை ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #சருமம், #முகம், #அழகு, #மோர், #புளிப்பு, #பிரைட், #பொலிவு, #விதை2விருட்சம், #Skin, #Face, #Facial, #Beauty, #Butter_Milk, #Bright, #v
பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க பருவநிலை மாற்றங்களாலும், கண்ட கண்ட ரசாயண க்ரீம்களாலும், அலங்கார உணவுகளை உட்கொள்வதாலும் பெண்களின் இயற்கையான முக அழகு மற்றும் இயற்கையான உடல் அழகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகிறது. இதன்காரணமாக மேக்கப் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி தங்களை அழகாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் தங்களின் இயற்கையான அழகை முற்றிலுமாக இழக்க நேரிடும். ஆகவே உண்ணும்போது ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். தங்களை அழகு படுத்திக் கொள்ளும் போது இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது பருவ நிலைக்கு ஏற்பட உடைகளை அணியத் தொடங்க வேண்டும். இதன் காரணமாக கிட்டத்தட்ட 50 சத‌வீதம் இழந்த இயற்கையான அழகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள‌ 50 சதவீதம் முக மற்றும் உடல் அழகினை திரும்ப பெறுவது எப்படி என்
இளமை அழகும் பலா கொட்டையும்

இளமை அழகும் பலா கொட்டையும்

இளமை அழகும் பலா கொட்டையும் மா, பலா, வாழை என்ற இந்த‌ முக்கனிகளில் இரண்டாவதாக வரும் கனி பலா. இந்த பலா பழத்தின் பார்ப்பதற்கு கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்தாலும் அதன் உள்ளே இருக்கும் பலா சுளைகளின் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தளவிற்கு சுவையானது அதுமட்டுமல்ல இது மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களையும் இது தருகிறது. இன்னும் சொல்லப் போனால், இளமையை தக்க வைக்கக் கூடியதாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு. பொதுவாக பலா சுளைகளை தின்று விட்டு அதனுள் இருக்கும் கொட்டை சேகரித்து வைத்து அதையும் பதார்த்தமாக செய்து சாப்பிடலாம். இது ஆரோக்கியம். உங்கள் முகத்தில் சுருக்கமோ அல்லது தோலில் சுருக்கமோ ஏற்பட்டு உங்கள் இளமையின் அழகு குலைவதாக நீங்கள் கருதினால், பலாச்சுளையின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்து ஒரு டம்ளர் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு அதனை மைய அரைத்தெடுத்து, முகத
தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால்

தேங்காய் எண்ணெய்யை பற்கள் ஈறுகள் மீது தடவி வந்தால் சிலருக்கு மட்டுமே பற்கள் வெண்மையாக பளிச்சிடும். பலருக்கு பற்களின் நிறம் மாறியிருக்கும். பற்களின் நிறங்கள் மொத்தம் 24 நிறங்க‌ள் உண்டு அதாவது வெண்மையில் தொடங்கி அடர்த்தி குறைந்த மஞ்சள் நிறம் பழுப்பு நிறமாக‌ மாறிக் கொண்டே வந்து அடர்த்தியான மஞ்சள்நிறம் கலந்த பழுப்பு நிறம் வரை என்பார்கள். இந்த பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து பற்கள் வெண்மையாக பளிச்சிட இதோ ஓர் எளிய குறிப்பு காலையில் தூங்கி எழுந்தவுடனோ அல்லது இரவு படுக்கச் செல்லும்போதோ பற்களை நன்றாக தேய்த்து விட்டு வாயை கொப்பளித்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து, தேங்காய் எண்ணெய் சிறிது உள்ளங்கையில் ஊற்றி, அதில் உங்கள் ஆள்காட்டி விரலை நனைத்து உங்கள் பற்கள் மீதும் ஈறுகள் மீதும் தினந்தோறும் தடவி வந்தால், ஓரிரு வாரங்களிலே உங்கள் பற்கள் வெண்மையாக பளிச்சிடுவதை நீங்களே காணலாம். மேலும் இ
பெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும்

பெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும்

பெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும் ஒரு கவிஞர், ஒரு இளம்பெண்ணின் அடர்த்தியான‌ கூந்தலை கண்ட ஆண் மயில், வானில் கார்மேகம் தான் சூழுந்து விட்டது என்று மனமகிழ்ந்து தனது தோகையை விரித்து அழகிய நடனம் புரியும். அத்தகைய கூந்தலை பின்னல் இடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இதுவே. சில பெண்கள், தனது கூந்தலை பின்னும்மோது மிகவும் இறுக்கமாக பின்னுவர். ஆனால் இது மிகவும் தவறான ஒன்றாகும். பொதுவாக தலைமுடியின் இறுக்கத்தால் அதன் வேர்ப்பகுதி பல‌ம் இழக்கும். இதன் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி மெல்ல மெல்ல‌ குறையத் தொடங்கும். மேலும் எப்போதும் இறுக்கமான பின்னலும், அதீத அலங்காரமும் கூந்தலுக்கு தொடர்ந்து செய்யும் போது கூந்தலின் வேர்கள் இழுக்கப்படுவதால் விரைவிலேயே முடிகள் உடைபடுகின்றன. முடி வளர்ச்சியைத் தடுக்கப்பட்டு வேகமாக உதிர்வு ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் நாட்கள்
This is default text for notification bar
This is default text for notification bar