Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்மிகம்

ஏகாதசி விரதம்

கீதா ஜயந்தி! மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகின்றனர். ♣ ஏகாதசி  ஒரு சக்தியே! விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, “ஏகாதசி’ என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி, அவள் உற்பத்தியான தினத்தில், உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார். (more…)

சொர்க்கம் பக்கத்தில்…

நாளை வைகுண்ட  ஏகாதசி! ஏகாதசி விரதமிருந்தாலே போதும். பாவங்களெல்லாம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை ஒருபுறம். ஏகாதசியன்று மரணமடைபவர், எத்தகைய பாவியாக இருந்தாலும், அவர் நேராக பரமபதத்துக்குள் நுழைந்து விடுவார் என்ற நம்பிக்கை (more…)

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர்

யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவ வழிபாட்டிலும் தான் கொண்டு போய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர். அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கி விட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன. இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்

உன்னை பலவீனன் என எண்ணாதே -சுவாமி விவேகானந்தர்

செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும். முப்பத்து மூன்று கோடிப்புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப் போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை. பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான். சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும். நம்

ரஷ்யாவில் கிருஷ்ணன் கோயில்

ரஷ்யாவின் தலைநகரான‌ மாஸ்கோவில் கிருஷ்ணன் கோயில் ஒன்று விரைவிலேயே கட்டப்பட உள்ளது. இந்த கிருஷ்ணன் கோயில் இஸ்கான் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் இந்திய அரசு உதவியோடு கட்டப்பட உள்ள இந்த கோவில் இந்தியாவில் உள்ள பழமையான கோயிலை போன்று கலை அம்சத்தோடும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் கட்டப்பட உள்ளதாகவும். கோயிலில் கட்டப்படும் வளாகத்தில் இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், சமுதாய நிகழ்ச்சிகள், பக்தர்கள் தங்குவதற்குரிய வசதிகள் மற்றும் அரங்கங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள வெர்ஸ்கினோ கிராமத்தில் இந்த கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் வரும் 2012ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி துவங்க உள்ளதாக நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.

சாதிகள் -அர்த்தமுள்ள இந்துமதம்- கவியரசு கண்ணதாசன்)

இந்து சமய வரலாற்றின் மிக ஆரம்பக் காலத்தில் இந்து சமூகமானது பல நிலைகளாகப் பகுக்கப்பட்டு அமைந்திருந்ததையே விளக்கும் வகையில், சாதி முறையானது அமைந்திருந்தது. பழங்குடி மக்கள் என்ற அடிப்படையிலும், செய்தொழில் அடிப்படையிலும், சாதி முறையானது அமைந்ததில் ஏற்பட்ட குழப்பமானது கண்டிப்பான நியதிகளில் ஒன்றாகப் பழங்குடி மக்களுடைய பழக்க வழக்கங்கள் பிரத்தியேகமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணமாயுள்ளது. சாதிமுறை அமைப்பினுடைய சமூக அம்சத்தைப் பார்க்கும் பொழுது அந்த அமைப்பானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது தெய்வீக அமைப்பின் மர்மமாக அமைந்து விடவில்லை. மக்களிடையே காணப்பட்ட உண்மையான வேற்றுமைகளுக்கு ஏற்பவும், (more…)

திருநீறு உணர்த்தும் தத்துவம்

இந்த உலகில் மாறாதது மாற்றம் ஒன்று மட்டும் தான். அந்த மாற்றங்களை கடந்தவர் இறைவன். `மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன்’ என்பது திருவாசகத்தின் வாக்கு. பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்களும் கூறுகின்றன. நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ (more…)

மவுனமே பூரண ஞானம் – – ரமணர்

ராமரும், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆஸ்ரமத்திலிருந்து மற்றொரு ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அப்படி கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும்போது கூடவே பல ரிஷிகுமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராமலட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமசீதா வருகையை அறிந்தனர். ராமலட்சுமணர் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காண முடிந்தது. பெண்கள் சீதையை சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக ""இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். கடைசியாக

யாரையும் பயமுறுத்தாதே! – சாய்பாபா

பல்புகள் வேறானாலும் அவற்றில் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப் போல் நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவை யெல்லாம் வேறு வேறாயினும், ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்து மக்களுக்கும்  ஒன்றேயாகும். * சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன். சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சு, மற்றவர்களது உணர்ச்சிகளையும் தூண்டி விடுவதாக அமையக்கூடாது. * அநியாயம், பொய்மை, அதர்மம் இவற்றால் குழப்பப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குணநலன்களை மீட்டு வந்து நிலைநாட்ட இளைஞர்களால் மட்டுமே முடியும். * பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும், ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். * மனிதர்கள் பயப்படக்கூடாது. "நானும் பயப்பட மாட்டேன், பிறரையும் பயப்படச் செய்யமாட்டேன்' என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.