Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்மிகம்

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும். (கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறோம்)

தியானம் செய்வது எப்படி ? –

தியானம் என்பது, மனதை பகவானிடம் வைத்து, மனதில் பகவானின் உருவத்தையே பதித்து, ஜெபம் செய்வது. அப்படி தியானம் செய்யும் போது, நடுவில் தடைபடக் கூடாது. பொதுவாக, தியானம் செய்யும் போது, கண்களை மூடிக்கொள்வர்; காரணம், கண்களைத் திறந்து கொண்டிருந்தால், எதிரில் நடப்பவைகளில் மனம் செல்லும். இது, தொடர்ந்த தியானத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும்.  தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வர். ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. மான் தோல் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். அமர்ந்த மான் தோல், புள்ளி இல்லாத மான் தோலாக இருக்க வேண்டும்.  மான் தானாக இறந்திருக்க வேண்டும். அதனுடைய தோல் தான் ஜெபத்துக்கு உகந்தது; வேட்டையில் கொல்லப்பட்ட மான் தோல், ஜெபத்துக்கு உதவாது. புள்ளி இல்லாத மான் தோலை, கிருஷ்ணா ஜனம் என்பர். இதுதான் உகந்தது. ஜெபம் செய்ய நதிக்கரை, தேவாலயம், புனித தலங்கள், சு

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்

இளமையில் வளையுங்கள் – கிருபானந்த வாரியார்

எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம். * எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை. * சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும். * நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள். * தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும். * இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள். * உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அண

பக்தரை நாடி வந்த பெருமாள்!

பகவானுக்கு  ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது. திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க  மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம். ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, “தூரப் போ…’ என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை. முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். “அடடா…

அனுபவமே உயர்ந்தது – புத்தர்

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர், புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான். அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன்.  இப்போது அவனுக்கு தேவை பார்வை.  வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று க

பகவான் ர‌மண மகரிஷி பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்த்திய உரை,

எளிமையின் மறு வடிவமும் மிகுந்த மன உறுதியும் கொண்ட பார் போற்றும் பகவான் ர‌மண மகரிஷி அவர்களை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலை இரவு ஒன்றில் நிகழ்த்திய உரை, உங்களுக்காக‌

ஈசனின் சொரூபங்கள்!

பகவத் தியானத்தில் ஈடுபட்டவர்கள், கண்ணை மூடி மவுனமாக தியானம் செய்வர். கண்ணை திறந்து கொண்டிருந்தால், பல விஷயங்களை பார்க்க தூண்டும்; அதனால், தியானம் கலையும். அதேபோல வாய், மூக்கு, அங்கங்கள் மூலமாகவும் தியானத்துக்கு பங்கம் ஏற்படலாம்.  தியானத்துக்கு தனிமை முக்கியம். இப் படி புலன்களை அடக்கி, தியானம், தவம் செய்பவர்களை ஞானிகள் என்று அழைப்பர். அஞ்ஞானத்தில் உழல்பவர்களுக்கு இடையே செல்வ செழிப்பு, ஏழ்மை, வறுமை, மேலான பிறவி, இழிந்த பிறவி போன்ற வேற்றுமைகள் இருக்கும்.  தியானத்தில் ஈடுபட்டு, சமாதி நிலையில் உள்ளவர்கள், இது போன்ற மாயாபேதங்களை உணர மாட்டார்கள். இந்த நிலையில் குறைபாடு ஏற்பட்டால், அதற்கு காரணம் மனம் தான். இந்த சக்தி, சிவசக்தியால் நடைபெறுகிறது. எட்டு போன்ற சொல் அஷ்டமூர்த்தியை குறிக்கும். நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இந்த எட்டு ஜட வஸ்துகளும் ஈசனுடைய சொ

தேனீயைப் பாருங்கள் – பட்டினத்தார்

மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள். ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும் போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை. ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும் போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள். தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும