1,76,00,00,00,00,000/-
(2010 டிசம்பர் மாத உரத்த சிந்தனை இதழில் வெளியான தலையங்கம்)
Rs.1,76,00,00,00,00,000/-
- நாறிப்போச்சு நாடு!
படித்து முடித்துவிட்டீர்களா? மூச்சு திணறுகிறதா? இத்தனைக்கோடி ரூபாய் (1.76 இலட்சம்) ஊழலால் உலக அரங்கில் மெகா ஊழலின் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது புண்ணிய பூமி பாரதம்!
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் அமைச்சர் மீது ஊழல் புகார். . . கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் திட்டத்தில் ஒரு மாநில முதல்வரே முறைகேடாக நடந்துகொண்டதாக புகார் . . தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவிக்காக ரூபாய் 600 கோடி ஒரு குடும்பத்திடம் பேரம் பேசியிருப்பதாக தகவல்கள் . . . . (இது இந்தாண்டில் மட்டும்)இப்படிப்பட்டத் தகவல்களால் நம் இந்திய தேசத்தின் முகம் அவமானப்பட்டுத் தலைகுனிந்திருக்கிறது.
ஊழல் புகாருக்கு ஆளான இரண்டு மந்திரிகளை உடனே பதவி நீக்கி, தன்னைப் பரி