
ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது - மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்ததாக சொல்லி காவல்துறையினரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக மரணம் அடைந்தனர். இந்த மரண சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்சும் காவல் நிலையத்தில் வைத்து அதீத சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் அவர்களின் நண்பர்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தமிழ்நாடு கடந்து, இந்தியா முழுவதும் தீயாக பரவி பெரும் சர்ச்சையாக கிளம்பியதோடு அல்லாமல் பலத்த எதிர்ப்புகளும் வலுத்தது. மேற்சொன்ன இருவரையும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய காவலர்கள் அத்தனை பேர்மீது கொலை வழக்கு பதிவு