
வெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை
வெட்கப்படுவோம் வேதனைப்படுவோம் - வாழ்வியல் வி(த்)தை
தலைப்பைப் படித்துவிட்டு என்ன இது, நான் ஏன் வெட்கப்படணும், ஏன் வேதனைப் படணும்ன்னு என்ற கேள்வி எழுவது நியாயமான ஒன்றுதான். இவ்வாறு ஏன் நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப் பட வேண்டும் என்ற காரணத்தை படித்தீர்கள் என்றால், உங்களுக்குள் இந்த தீய எண்ணம் இருந்தால் நீங்களும் வெட்கப்படுவீர்கள், வேதனைப்படுவீர்கள்.
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமயகுரு, "நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த ச