Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினிமா செய்திகள்

மான்ஸ்டர் படம் – அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் படம் – அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் திரைப்படம் - அதிர்ச்சியடைந்த நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் சில தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான்ய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படம், வெள்ளித்திரையில் அலங்கரித்த ஒருசில நாட்களிலேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. இதற்கு அடுத்த‍தாக கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்ய திரைப்படத்தில் கார்த்தியின் அத்தை மகளாக நடித்திருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் இந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் போலி டிவிட்டர் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் திரைப்படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்த
நடிகை அஞ்சலியுடன் நான் நடித்த அனுபவம்

நடிகை அஞ்சலியுடன் நான் நடித்த அனுபவம்

நடிகை அஞ்சலியுடன் நான் நடித்த அனுபவம் தமிழ் எம்.ஏ. திரைப்படத்தில் அறிமுகமாகி, ஆயுதம் செய்வோம் திரைப்படத்தின் மூலம் நுழைந்து, அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்த‌தன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்தார் நடிகை அஞ்சலி. இவருடன் வளர்ந்து வரும் இளம் நடிகர், சாம் ஜோன்ஸ், ஏமாளி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானவர். அடுத்து தர்மபிரபு, லிசா 3டி படங்களில் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். நடிகை அஞ்சலியுடன் நான் நடித்த அனுபவம் - சாம்ஜோன்ஸ் பி.காம் பட்டப்படிப்பு லயோலா கல்லூரியில் படித்தேன். அப்போது எனக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என்னுடைய‌ முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் அசாதாரண‌ வாய்ப்பு வந்தது. இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன். பெங்களூரில்
ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர். லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி காதல் அழிவதில்லை தரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு லாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், தெலுங்கு திரைக்குத் தாவினார். இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம், அதை விட எனக்கு நடிக்க ஆர்வமில்லை என்று கூறியுள்ளார். மேலும், படங்களில் தயாரிக்கவே தான் மிக ஆர்வமாக உள்ளதாக சார்மி கூற, இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. #காதல்_அழிவதில்லை, #நடிகை, #சார்மி, #சிம்பு, #தயாரிப்பு, #தயாரிப்பாளர், #விதை2விருட்சம், #Kadhal_Azhivadhillai, #Actress, #Charmi, #Simbu, #Chimbu, #Produce, #Producer, #vidai2virutcham, #vidhaitovirutcham,
ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை - கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் பேக்கரியில் பெரிய‌ ரக கேக் ஒன்றின் நடுத்தர‌ விலையே ரூ.1000, மேலும் பின்னணியில் அலங்கார பெயர்ப்பலகை செய்ய‌ குறைந்தபட்ச விலையே ரூ.1,500. மேலும் ஒரு நல்ல‌ புடவையின் குறைந்தபட்ச விலை 800 ரூபாய். ஆக மொத்தம் ரூ.3,300 ஆகிறது. ஆனால் விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் ஒரு பெரிய வடிவ‌ கேக், பின்னணியில் அலங்கார‌ பெயர் பலகை மற்றும் புடவை இவை அனைத்தும் ரூ.500-ல் கிடைக்கிறதாம் அதுவும் யார் காதில் பூ சுற்றுகிறார்களோ? பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் மீனா என்கிற கதாபாத்திரத்திற்கு பிறந்தநாள். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதுதான் மேற்படி கூத்து அரங்கேற்றம். இயக்குநர் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார். இதற்கு பெயர்தானோ சீரியல் சிரிப்பு. உங்களுக்கு மேற்சொன்ன அனைத்தும் ரூ.500-ல் கி
தில்லுமுல்லு நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்

தில்லுமுல்லு நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்

தில்லுமுல்லு புகழ் நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம் K.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு அங்கும் ஓடி வருவாரே அவர்தான் விஜி. அன்று தொடங்கிய இவரது திரைப்யணம் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய‌ ஆரோஹணம் திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலால் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருப்பார். அந்தபடம் விருது பெற்றது. தற்போது இவரது மகள், லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தற்போது நடிப்பு, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பு, திரைப்படம் இயக்கம் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்'. பசங்க கிஷோர் நாயகனாக
மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் - முட்டை கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் - களேபரம் கமல் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் மீது பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேர் அழுகிய முட்டை மற்றும் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த தொண்டர்கள், முட்டைவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சியில் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தாம் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே" என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கமலின் நாக்கை வெட்டணும்' என்று பேட்டி கொடுத்தார்.
இயக்குநராக அவதாரம் எடுக்கும் நடிகை

இயக்குநராக அவதாரம் எடுக்கும் நடிகை

இயக்குநராக அவதாரம் எடுக்கும் நடிகை தான் விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் சில சமரசங்கள் செய்து நடிக்க வேண்டி இருந்ததால் தானே இயக்குனர் ஆவது என்று முடிவு செய்திருக்கிறார் நடிகை பூ பார்வதி. நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ் போன்றவர்கள் இயக்குனர்களாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க‍து. இதுபற்றி பார்வதி கூறும்போது, ‘மிக விரைவில் நான் டைரக்‌‌ஷன் செய்ய இருக்கிறேன். இதற்கான முடிவை ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டேன். நடிகையாக எனக்கு இது திரையுலகில் மிக முக்கிய படமாக இருக்கும். எனக்கு முக்கிய படம் என்பதைவிட என்னுள் புதைந்திருக்கும் இயற்கையின் வெளிப்பாடாக இருக்கும். நான் படம் இயக்குவது, ஒரு டைரக்டராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நேர்மையாக ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே காரணம்’ என்று கூறியுள்ளார்.
நரசிம்ம‍ன் ஓமக்குச்சி நரசிம்மன் ஆனது எப்படி? திரைக்குப் பின்

நரசிம்ம‍ன் ஓமக்குச்சி நரசிம்மன் ஆனது எப்படி? திரைக்குப் பின்

நரசிம்ம‍ன் ஓமக்குச்சி நரசிம்மன் ஆனது எப்படி? திரைக்குப் பின் ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஓமகுச்சி என பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? பிரபல நாடக இயக்குனர் தில்லை ராஜன் 'நாரதரும் நான்கு திருடர்களும்' என்ற நாடகத்தில் கராத்தே பயில்வானாக நரசிம்மன் நடித்தார். நகைச்சுவையாக அமைய வேண்டும் என்பதற்காக பிரபல கராத்தே வீரர், யாமகுச்சியின் பெயரை நாடகத்தின் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்த போது, தமிழில் அப்பெயரை ஓமகுச்சி என்று வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்று நினைத்து அப்பெயரை வைத்தனர். இவருக்கு சரஸ்வதி என்கிற மனைவியும் ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர், 2009ஆம் ஆண்டு மரணமடைந்தார். #யாமகுச்சி, #பயில்வான், #ஓமக்குச்சி, #நரசிம்மன், #ஓமக்குச்சி_நரசிம்மன், #நாடகம், #நாரதரும்_நான்கு_திருடர்களும், #கராத்தே, #விதை2விர
சரித்திர உண்மை சில‌ருக்கு கசக்கத்தான்  செய்யும் – பிக்பாஸ் கமல் அதிரடி பதில்

சரித்திர உண்மை சில‌ருக்கு கசக்கத்தான் செய்யும் – பிக்பாஸ் கமல் அதிரடி பதில்

சரித்திர உண்மை சில‌ருக்கு கசக்கத்தான் செய்யும் - பிக்பாஸ் கமல் அதிரடி பதில் நான் பேசியது சரித்திர உண்மை. சரித்திர உண்மையைப் பேசும் போது காயம் ஆறாது. உண்மை கசக்கத்தான் செய்யும்” என்று கமல் பிரசாரத்தில் பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அரவக்குறிச்சியில் பேசுகையில், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. என்னுடைய பேச்சை முழுவதுமாகக் கேட்காமல் அதன் நுனியைக் கத்தரித்துப்போட்ட ஊடகத் தோழர்கள், என் மேல் என்ன குற்றம்சாட்டுகிறார்களோ அதற்கு அவர்களும் தகுதியானவர்கள். நான் ஒருமுறைதான் சொன்னேன். வாலை