Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செய்திகள்

News

தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது

தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது

தர்பார் 2வது லுக் - தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த லுக்கில் ரஜினியின் உடல், நல்ல திடகாத்திரமான ஒரு இளைஞனின் உடல் போன்று தெரிகிறது. நம்ம ரஜினியின் வயதோ 68. இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தபோது இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவைதான்
சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 - இது தோல்வியல்ல - இஸ்ரோ விளக்கம் இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக நாடே உலகமே காத்திருந்தது. இந்நிலையில் ரோவருடன் தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க வில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிட்டர
வெற்றித் தளபதி ஸ்டாலின் – பாஜக பாராட்டு

வெற்றித் தளபதி ஸ்டாலின் – பாஜக பாராட்டு

வெற்றித் தளபதி ஸ்டாலின் - பாஜக பாராட்டு முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமண விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர்களின் ஒருவரான முன்னாள் எம்.பி. சி.பி. ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், கலைஞருக்கு பிறகு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், எங்களை வீழ்த்தி வெற்றி தளபதியாக உள்ளார். அதனால் நாங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியது உள்ளது. அவரிடம் கற்றுக்கொள்ளவும் அதிகம் இருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் உள்ள சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் பாஜக காலூன்ற பெரும்
பெண்களின் வயது சார்ந்த அறிகுறிகளும் அதனால் ஏற்படும் மாற்றங்களும்

பெண்களின் வயது சார்ந்த அறிகுறிகளும் அதனால் ஏற்படும் மாற்றங்களும்

பெண்களின் வயது சார்ந்த அறிகுறிகளும் அதனால் ஏற்படும் மாற்றங்களும் பெண்களுக்கு வயதாகும் போது, அவர்களிள் சருமமும் வயதாகிறது. அப்போது என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். 20களில்: உங்கள் சருமம் அதிகபட்ச பொலிவுடன் காணப்படும், பதின்பருவ பருக்களின் பாதிப்பு தொடரும். குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தரித்தல் சருமத்தைப் பாதிக்கலாம். 30களில்: மரபுரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், பெரிதாக மாற்றம் இருக்காது, ஆனாலும் கண்ணின் கீழ் பைகள், வாயை சுற்றிலும் சிரிக்கும் கோடுகள் போன்றவை ஏற்படக்கூடும். 40களில்: வயதாவதன் தெளிவான அறிகுறிகளை சருமம் காண்பிக்க தொடங்கும். நெற்றி சுருக்கங்கள், உள்ளங்கையின் பின்புறம் சுருக்கம், கழுத்து மற்றும் புறங்கைகளில் சுருக்கம், தொங்கும் சருமம் போன்றவை ஏற்படக்கூடும். 50களில்: அரைநூற்றாண்டை கடந்ததன் தெளிவான அறிகுறிகளை சருமம்
மூன்று நடிகைகளிடம் மாட்டிக்கொண்ட அந்த நடிகர்

மூன்று நடிகைகளிடம் மாட்டிக்கொண்ட அந்த நடிகர்

3 ஹீரோயின்களுடன் விஷ்ணு விஷால் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா மற்றும் விக்ரம் உட்பட ஜாம்பவான்கள் இருந்தாலும், தனக்கென பாதை வகுத்துக்கொண்டும் தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவருமான விஷ்ணு விஷால். இவர் அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஏற்கனவே விஷ்ணு விஷால், காடன், இன்று நேற்று நாளை 2 மற்றும் பெயரிடப்படாத 2 படங்கள் என அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Vishnu_Vishal, #Manjima_Mohan, #Raiza_Wilson, #FIR, #எப்.ஐ.ஆர்., #விஷ்ணு_விஷால், #ரெ
கவுண்டமணி போர்க்கொடி – சிக்சர் திரைப்படத்திற்கு எதிராக

கவுண்டமணி போர்க்கொடி – சிக்சர் திரைப்படத்திற்கு எதிராக

கவுண்டமணி போர்க்கொடி - சிக்சர் திரைப்படத்திற்கு எதிராக அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ள ‘சிக்சர்’ திரைப்படத்தில் வைபவ் நடித்திருக்கிறார். இப்படத்தை டிரெண்ட் ஆர்ட்ஸ், வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார்கள். பல்லக் லால்வாணி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் வைபவ் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை காமெடியாக உருவாக்கி இருக்கிறார்கள். இதே போல் கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி ‘சின்னதம்பி’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்சர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத
காதலுக்காக ஏங்கும் நடிகை

காதலுக்காக ஏங்கும் நடிகை

காதலுக்காக ஏங்கும் நடிகை ஜோக்கர், ஆண் தேவதை உட்பட சில திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகை ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது:- ’நான் அதிகம் புடவையில் போட்டோஷுட் செய்தது இல்லை. இப்போதுதான் செய்து இருக்கிறேன். ஜோக்கர் படத்தை அடுத்து கொஞ்சம் வித்தியாசம் காட்ட மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது ஒரு மாற்றத்திற்காக மீண்டும் புடவையில் போட்டோ ஷுட் செய்தேன். ஒரு வித்தியாசம் காட்டத் தான் இந்த போட்டோ ஷுட் செய்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்தால் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அந்நிகழ்ச்சியில் ஷெரின், தர்‌ஷன் இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி மிகவும் பிடித்த நடிகர். விரைவில் எனது அடுத்த படத்துக்
நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம்

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம்

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம் ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அம்மு அபிராமி. அடுத்து தனுசுடன் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்து நான் மகான் அல்ல படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த வினோத் கி‌ஷன் ஜோடியாக அடவி என்ற படத்தில் நடித்துள்ளார். ‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும் அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. #அம்மு_அபிராமி, #அபிராமி, #விதை2விருட்சம், #அம்மு, #அடவி, #Ammu_Abirami, #Abirami, #Ammu, #vidhai2virutcham, #vidhatovirutcham, #seedtotree, #seed2tree, #Adavi,
புது நடிகையின் திடீர் புரட்சி

புது நடிகையின் திடீர் புரட்சி

புது நடிகையின் திடீர் புரட்சி அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது என் காதல் புத்தகம். இப்படத்தில் ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது ஜி கமலம். இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்து இயக்குனர் கூறும் போது, ‘தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது. கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர். விவசாயம் செய்வதற்கும், திரு
பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்

பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்

புதிய பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகம் முழுக்க பொருளாதார சரிவு நிலவி வருகிறது, இந்தியா பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். பல்வேறு தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும். இந்நிலையில்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், தற்போது சர்வதேச ஜிடிபி 3.2% ஆக இருக்கிறது. சர்வதேச அளவில் பொரு