Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விளையாட்டு செய்திகள் – Sports

இந்தியாவுக்கு 33வது தங்கம்

டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 33வது தங்கத்தை வென்றுள்ளது. டேபிள்டென்னிஸ் ஆண்கள் பிரிவு இரட்டையரில் இந்தியாவின் சரத் கமல் சுபாஜித் சாகா ஜோடி, சிங்கப்பூர் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர்

இந்தியாவுக்கு எதிராக சதி

டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா பதக்கங்களை குவித்துவருகிறது. இதனை தடுக்க ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இணைந்து பெரும் சதியில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவாக, வரும் 2014ல் கிளாஸ்கோவில் நடக்க உள்ள அடுத்த காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தம்மற்றும் "கிரிக்கோ-ரோமன்' பிரிவு நீக்கப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் வரும் 2014ல் 20வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில், பெண்களுக்கான மல்யுத்தம் மற்றும் "கிரிக்கோ-ரோமன்' பிரிவை நீக்குவது என, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு, இந்திய வீரர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் ஆஸ்திரேலியாவின் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். நீச்சலில் ஆஸ்திரேலியா அதிக பதக்கங்களை தட்டிச் சென்றது. அதற்கா

இந்தியா பட்டியலில் 2 ம் இடம்5 தங்கம் வென்றது

காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறுவார்கள் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தங்க மகன்கள் அபினவ்பிந்த்ரா மற்றும் ககன்நரங் வீரமகன்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியா தற்போது தங்கம் 5, வெள்ளி 4, வெண்கலம்2 என மொத்தம் 11 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 8 தங்கம், 8 வெள்ளி 3 வெண்கலம் ‌பதக்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்று முன் தினம் துவங்கிய காமன்வெல்த் கோலாகல போட்டியில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தாலும், கோலாகல துவக்க விழாவை அடுத்து இந்தியா தனது பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக்கொண்டது. முதல் நாள் ஆட்டத்தில் பதக்கம் பெற்ற வீரர்கள்: முதல் நாள் ஆட்டத்தில் நேற்று இந்திய வீராங்கனைகள் பளு தூக்க

இந்தியாவின் ப‌தக்க‍ வேட்டை ஆரம்பம்!!!

48 கிலோ பளூ தூக்கும் பிரிவில் சோனியா சானு வெள்ளிப்பதக்க‍ம் வென்றார் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்க‍ம் ம‌களிர் பளுதூக்கும் போட்டியில் சந்தியா தேவி வெண்கலப் பதக்க‍ம் தட்டிச்சென்றார்

உங்கள் சாய்ஸ்: சிரிப்பு

தமிழன் தொலைக்காட்சியில் சிரிப்பு உங்கள் சாய்ஸ் எனும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப் பாகிறது. அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக அணுகும்வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. . பத்திரிகையாளரான பிரியா பாலு இந்த நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார். ஆர்.கஜா மற்றும் ரவிக்குமார் இந்த தொடரில் முக்கிய பாத்திரங்கள் தோன்றி நகைச்சுவை விருந்து படைக்கின்றனர்.வரும் வாரங்களில் இந்த நிகழ்ச்சியில் மேலும் பல புதுமைகளை புகுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

காமன்வெல்த்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பேட்மின்டன்: சாய்னா நேவால் கென்யாவின் ஜோசப் மெர்சி என்பவரை 21 11, 21- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். சேத்தன் ஆனந்தும் வெற்றி பெற்றார். இந்திய ஆடவர் 4x100 தொடர் ஓட்ட அணி முதன் முதலில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. வீர்தவால் கேத், அன்ஷுல் கோதாரி, அர்ஜுன் ஜெயபிரகாஷ், ஆரோன் டிசௌசா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர். இரட்டையர் டென்னிஸில் போபண்ணா -நிருபமா ஜோடி, ஆஸ்ட்ரேலிய இணையிடம் 3 செட்களில் தோல்வி தழுவியது. .

8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம்

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் டில்லியில் இன்று கோலாகலமாக துவங்குகிறது.  தலைநகர் டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "ஹெலிகாப்டர்' மற்றும் ஆளில்லாத உளவு விமானங்கள், வானில் வட்டமடித்தவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றன. நகர் முழுவதும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராணுவம், போலீசார், கமாண்டோ படை உட்பட ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.டில்லியில் நடக்கும் இந்த போட்டி 19வது காமன்வெல்த் போட்டி.  வரும் 14ம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன. மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில் 71 நாடுகளை சேர்ந்த  8,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் விஜேந்தர், சுஷில் குமார், சானியா, செய்னா உள்ளிட்ட மிகப் பெரும் நட்சத்திரப் படை களமிறங்குகிறது. சார்லஸ் பங்கேற்பு: இன்

காமன்வெல்த் துவக்க விழாவில் கவுரவம்: இந்திய கொடியுடன் அபினவ் பிந்த்ரா

காமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவில்,இந்திய கொடியை ஏந்தி வரும் அரிய கவுரவம்"ஒலிம்பிக் தங்க நாயகன்' அபினவ் பிந்த்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை துவங்குகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி நிதியில் பெருமளவில் ஊழல், அசுத்தமான விளையாட்டு கிராமம், சுப்ரீம் கோர்ட் கண்டனம் என, நிறையசர்ச்சைகள் வெடித்தன. இவற்றை கடந்து போட்டிகள் வெற்றிகரமாக நடக்க உள்ளன. கொடி கவுரவம்: நாளை ஜவர்கர்லால் நேருஅரங்கில் மிகப் பிரம்மாண்டமான துவக்க விழா நடக்க இருக்கிறது. இதில், இந்திய குழுவுக்கு முன்பாக மூவர்ணக் கொடியை அபினவ் பிந்த்ரா ஏந்திச் செல்கிறார். கடந்த 2008, பீஜிங் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்தங்கம் வென்ற இவர், காமன்வெல்த் ஜோதியையும் எடுத்து வர உள்ளார். கொடி மற்றும் ஜோதி என இரண்டையும் இவரே எடுத்து வர முடியுமா என்ற குழப்பம் நிலவியது.இது குறித்து இந்தியக்