வேலைவாய்ப்பு முகாம் – நவ.30
திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நவ. 30-ம் தேதியில் அதாவது நாளை வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் தொழில் நிறுவன புரிந்துணர்வு மைய இயக்குநர் த. செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
"திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட 8 மாவட்டங்களில் 85 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், 4 உறுப்புக் கல்லூரிகள் உள்ளன.இந்தப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் - தொழில் நிறுவனம் புரிந்துணர்வு மையம் மாணவர்களுக்கான தொழில் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதுடன், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. இந்த முகாமில் மும்பையைச் சார்ந்த டாடா பவர் என்ற நிறுவனம் மாணவர்களுக்கான நேர்காணலை நடத்தும் என்றும அவர்களுக்கு ஆண்டுக்கு 4.10 லட்சம் ஊதியம் அளிக்க முன் வந்துள்ளது.
இந்த நேர்காணல் முகாமில் இயந்திரவியல் துறை, மின்னியல், மின்னணுவியல் துறை