மேன்மை மிகு அம்மாவுக்கு —
தங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. நவ., 21, 2001ல் தொலைந்து போன என் வாழ்க்கைக்கு, எங்கு தேடியு ம் பலன் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தங்களால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
அம்மா... நான் திருமணம் செய்திருப்பது, என் அம்மாவி ன் அண்ணன் மகளைத்தான். எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ஆங்கில இலக்கியம் படித்து, அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். நான் டிப்ளமோ முடித்து, ஒரு டிராக்டர் கம்பெனியில், பார்ம் எக்சிகியூட் டிவாக வேலை செய்கிறேன். பணத்திற்கோ, பண்பிற்கோ, பாசத்திற் கோ இறைவன் எந்த குறையும் வைக்கவில்லை.
குடும்பத்தில் எல்லாரிடமும் அதிகமான பாசம் வைத்திருப்பது நான் மட்டும்தான். அதே போல், பெரியவர் முதல், சின்னக் குழந்தை வரை பாசம் வைத்திருப்பது என்னிடம் மட்டும்தான்.
எனக்கு ஏதேனும் நேர்ந்தால், எல்லாரும் துடித்துப் போவர். எனக்கு ப