Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அஜித்

அஜித் ரசிகர்களுக்கு ஓரு நற்செய்தி

அஜீத்தை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்டநாள் கனவு. அதனை நிறைவேற்ற இருக்கிறார் அஜீத். விரைவில் தமது ரசிகர்களை சந்திக்க உள்ளார். நடிகர்களில் சற்று வித்யாசமானவர் அஜீத். தனக்கென்று ஒரு கொ‌ள் கையை வைத்துக் கொண்டு அதன்படி நடப்பவர். தமிழில் முன்னணி நடிகராக உள்ள இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் இடத்தில் மிகுந்த மரியாதை கொண்டுள்ள அஜீத்தை, சமீபத்தில் இவரது ரசிகர்கள் மிகவும் டெண்ஷன் அடைய செய்தனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில் அஜீத்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் எண்ணு கின்றனர். இதற்காக ரசிகர்கள் சிலர் ரசிகர் மன்ற தலைமை இடத்தில் கூட (more…)

அஜித்தும், விஜயும் இணைந்து நடி. . .

சென்னையில் தனித்தனியே நடந்த ஷூட்டிங்கின் இடைவெளியில் சந்தித்து பேசியிருக்கிறார்கள் அஜித்தும், விஜயும். "காவலன்' பட வெளியீடு, மங்காத்தா, அரசியல், தற்போதைய சினிமா என அனைத்தையும் பேசி முடித்ததும், இருவரும் இணைந்து நடிப்பது குறித்தும் பேசினார்களாம். ""நீங்க இணையும் படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு தாங்க''ன்னு இருவரிடமும் ஆசையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. (நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

வில்லனை உருமாற்றிய பாலா

வேகவேகமாகப் படம்பிடிக்கப்பட்டுவரும் அவன் இவன் படத்தின் செய்திகள் நாளுக்கு நாள் சூடாக வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்தப் படத்தில் ஆர்.கே. முக்கிய வில்லன் என்ற சூடான செய்தி வெளியாகி அடங்குவதற்குள் அடுத்த சூடான செய்தி இப்போது கசிந்திருக்கிறது. அவன் இவனில் இடம்பெற்றுள்ள இன்னொரு முக்கிய வில்லன் கதாபாத்திரம் பற்றிய ரகசியம்தான் இது. கோலிவுட் வட்டாரத்தைப் பொறுத்தவரை இயக்குநர்களுக்கு சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர் முதலாளிகள் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. அந்த இரண்டு பேரில் ஒருவர் அபிராமி ராமநாதன். இவரை கே.பாலசந்தர் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். ஆனால் இன்று வரை அவர் மேடை நாடகங்களில் நடித்துவருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அதேபோல பாரதிராஜாவில் தொடங்கி நடிக்க அழைக்கப்பட்டவர் சென்னை வடபழனி கமலா திரையரங்கின் அதிபர் வி.என். சிதம்பரம் செட்டியார். இவரைத்தான் இயக்குநர் பாலா அ

அஜித் சொந்த படம் எடுக்கிறார்

அஜித்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி பல படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அஜித் ஏறக்குறைய ஒரு தயாரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பின் நடிகராக மட்டுமே இருந்து வந்தார் அஜித். தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் அஜித். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு குட்வில் என்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயர் சூட்டியிருக்கிறார். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் தல. எனது நண்பர்களுக்கும் குட்வில்லில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அஜித்திடம், இளைய தளபதி விஜயை வைத்து படம் எடுப்பீர்களா என்றால்... கண்டிப்பாக அந்த எண்ணம் உண்டு என்று சிம்பிளாக பதிலளித்தார் தல. தற்போது தனது நிறுவனத்திற்காக பிசியாக கதை கேட்டு வருகிறார் அஜித்.

நோ நோ என்கிறார் சிம்பு!

அஜித்தின் மங்காத்தா படத்தில் நடிகர் சிம்பு நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புவதாக ‌டைரக்டர் வெங்கட்பிரபுவிடம் சிம்பு கேட்டுக் கொண்டதாகவும், அஜித்தும் அதற்கு சம்மதித்ததால் மங்காத்தாவில் சிம்பு கெஸ்ட்ரோலில் நடிக்கிறார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மங்காத்தாவில் தான் நடிக்கவில்லை என்று கூறுகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் வானம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேட்டியளித்த சிம்புவிடம், நிருபர்கள் மங்காத்தா நீங்களும் நடிக்கிறதா ஒரு செய்தி உலவுதே? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிம்பு, நானும் கேள்விப்பட்டேன். அப்படியொரு எண்ணம் இதுவரைக்கும் இல்லை. யாரும் நடிக்கச் சொல்லி கேட்கவும் இல்லை, என்றார். உங்களை விட

காங்கிரஸில் அஜித் . . .

நடிகர் அஜித் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய தகவல் ஒன்று கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியொன்றில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் ‌பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய செய்தியொன்று கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது. இதுபற்றி விசாரித்தால், அந்த தகவல் பொய்யானது இல்லை என்று தெரியவருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீப காலமாக அஜித்துக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். அதும் கட்சியி
This is default text for notification bar
This is default text for notification bar