Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அஞ்சலி

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)

அஞ்சலியும், அமலா பாலும் . . . .

ஹாலிவுட் பட நிறுவனம், டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க விருக்கின்றனர். ஒருவர் "அங்காடித் தெரு" புகழ் நடிகை அஞ்சலி, இன்னொருவர் "சிந்து சமவெளி சர்ச்சை" புகழ்  நடிகை அமலா பால் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதில்  இரண்டு கதாநாயகர்கள் கதையான‌ இந்த படத்தின் நாயகர்களாக "வாமணன்" படத்தில் நடித்த நடிகர் ‌ஜெய்யும், நடிகர் "பசங்க" மற்றும் "களவானி" படங்களில் நடித்த விமலும் நடிக்கிறார்கள். அந்த புதிய படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்த புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கோடம்பாக்கம் வட

தேசிய கீதத்தை அவமதித்தேனா? நானா? இல்லை இல்லை என்கிறார் – சவான்

மும்பை தாக்குதல் நடந்த 2வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான், தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்ற சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இச்செயல் தேசிய கீதத்தை அவமித்த செயல் என்றுகூறி  பா.ஜ.க.வினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதுகுறித்து பிருதிவிராஜ் சவான் அளித்துள்ள விளக்கத்தில், நிகழ்ச்சியின்போது  தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது தனக்கு கேட்கவில்‌லை என்றும், தேசியகீதம் கேட்டவுடன் நான் அந்த இடத்திலேயே நின்று விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் பிருதிவிராஜ் சவான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க‌, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன•

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பை போலீசார், போர்ஸ் ஒன் படையினர் மற்றும் குவிக் ரெஸ்பார்ன்ஸ் படையினர் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரைன் டிரைவ் டிரைடன்ட் ஓட்டல் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, ‌தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் முடிவடைகிறது. போரிவிலி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செஞத்தினார். மும்பையில் 2008 நவம்பர் 26-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்திய கமாண்டோப்படையினர் அதிரடியாக செயல்பட்டதில் பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெறும் அமைதிப் பேரணியில்

அங்காடித்தெரு புகழ் அஞ்சலி பேட்டி: சூட்டிங்கில் கலவரம்! உயிர் தப்பியது எப்படி?

நடிகர் கரண் நாயகனாகவும், நடிகை அஞ்சலி நாயகியாகவும் நடிக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறார். டைரக்டர் வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் கதை குமரி மாவட்டத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் வடிவுடையானின் சொந்த ஊரான களியக்காவிளை பகுதியில் கடந்த வாரம் சூட்டிங் நடத்தப்பட்டது. நேற்று குலசேகரம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அஞ்சலி ‌தொடர்பான காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தபோது சூட்டிங் ஸ்பாட்டுக்கு 7 பேர் அடங்கிய கும்பல் ஒரு ஆட்டோவில் வந்தது. அந்த கும்பல் படப்பிடிப்பு குழுவினரிடம் தகராறு செய்ததுடன், படக்குழுவினரை தாக்கியது. டைரக்டர் வடிவுடையான் தாக்கப்பட்டார். அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதற்கிடையில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த அசிஸ்டென்

26ம்தேதி நடிகர் முரளிக்கு அஞ்சலி கூட்டம்!

மறைந்த நடிகர் முரளியின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி கூட்டம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகர்களில் ஒருவர், முரளி. கடந்த 8-9-2010 அன்று எதிர்பாராதவிதமாக அவர் இயற்கை எய்தினார். அவருடைய நினைவை போற்றும் வகையில், வருகிற 26ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு, நடிகர் சங்கத்தில் அமைந்துள்ள சாமி சங்கரதாஸ் கலையரங்கில் நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, கில்டு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என தமிழ் திரையுலக அனைத்து பிரிவினரும் கலந்துகொள்கிறார்கள்