
விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?- அமலாபால் விளக்கம்
விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?- அமலாபால் விளக்கம்
விஜய் சேதுபதியின் 33-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் பட வில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தினை வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்குகிறார். இதனிடையே, அமலா பால் தயாரிப்பு நிறுவனத்திடம் நட்புரீதியாக இருக்கவில்லை என கூறி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த அமலாபால், அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து நானாக விலகவில்லை. என்னிடம் ஆலோசிக்காமலே படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். இப்படத்திற்காக நான் மும்பையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென நான்