
அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண பீதியில் உறையும் மக்கள்
அலறித்துடிக்கும் அமெரிக்கா - மரண பீதியில் உறையும் மக்கள்
உலகத்தில் உள்ள மொத்த நாடுகளில் சுமார் 210 நாடுகளில் கொரோனா எனும் கொடூர வைரஸ் பரவி, மனித உயிரிழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருவது. எதற்கெடுத்தாலும் தோள் உயர்த்தும் ஆளாளப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கொரோனா வைரஸால் அலறிக் கொண்டிருக்கின்றன.
முதன்முதலில் சீனாவில் கண்டு அறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து, மற்றும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டு அறிய மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது வரை அந்த முயற்சிகளில் எள்ள்ளவு கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனைக்குரியதே.
இன்றைய தேதி வரை கண