
அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)
அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)
பொதுவாக பக்தர்கள் தான் கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதுண்டு. ஆனால் இங்கே கடவுளாக வழிபடும் அம்மன், தனது பக்தர் ஒருவரிடம் தனக்கு கொலுசு வாங்கிக் கொடு என்று கேட்ட உண்மையான வரலாறு குறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள். பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். 1999-