அன்புடன் அந்தரங்கம் (17/06): "உன் கணவன் பிரச்னையை, எடுத்தேன் – கவிழ்த்தேன் என கையாளாதே மகளே!"
அன்புள்ள அம்மா —
நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு வயது 30. திருமண மாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பு முடிந்த, அடுத்த மாதம் முதல், இன்று வரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண வருக்கு, 34 வயது. இரண்டு தங் கைகள்; திருமணமாகி விட்டது. என் கணவர் முன்கோபக்காரர். அவர், வீட்டிற்கு ஒரே பையன் என்பதால், மிகவும் செல்லமாக வும், தவறை சுட்டிக்காட்டி திரு த்தவும் பெற்றோர் முற்படவில் லை. அவரே சரியாகி விடுவார் என்றனர். அதற்கு இடையூறாக நான் வந்தேன். "குடிமகன்'களை க ண்டால், குழந்தை பருவத்திலேயே வெறுப்பவள் நான். என் கணவர், வாரந்தோறும் நண்பர்களுடன் சென்று மது அருந்துவார். இதனால், எங்களுக்குள் சண்டை வரும், பின் சமாதானம் ஆவோம். தற்போது, வார நாட்களிலும் ஆரம்பித்து விட்டார். சண்டை பலமானது, 15 நாட் கள் பேசாமல் (more…)