
தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்
தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்
சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண்களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண்கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.
பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த பிறகு தொடர்ச்சியாக நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப் போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு,