Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அவளும் ஒரு படுக்கையறையில் . . .

அன்புடன் அந்தரங்கம் (05/05/2013): வெறும், “செக்ஸ்’ மட்டுமே தாம்பத்யமாகி விடாது

அன்புள்ள அம்மாவுக்கு — நான், "டிகிரி' படித்தவள். எனக்கு திருமணம் முடிந்த முதல் மாதத்தி லேயே பிரச்னை துவங்கியது. இரண்டு குழந்தைகள் இருக்கின்றன ர். என் கணவர் ஒரு அம்மா பைத்தியம். எனக்கு என்ன வாங்கி கொடு த்தாலும், நான் என்ன சொன்னாலும், அதை அப்ப டியே அம்மாவிடம் போய் சொல்லி விடு வார். இது தவிர, "செக்ஸ்' விஷயத்திலும் அவர் சரியில்லை. நான் வலிய போனாலும் ஈடு பாடு காட்டமாட்டார். நானே, அவரிடம் நெருங்கினால் என்னை ஒதுக்கி தள்ளு வார். அந்த நேரம், கையை வெட்டிக் கொள்வேன்... சூடு போட்டுக் கொள்வேன்... இவ்வாறு என்னை கட்டுப்படுத்தி, அழுது தூங்குவேன். ஆக, எங்களுக்குள் சின்ன பிரச்னை கூட தீராமல், இழுத்துக் கொண் டே போகும். விஷம் குடித்து காப்பாற்றப்பட்டேன். இரண்டு மூன்று முறை இதே போல (more…)

அன்புடன் அந்தரங்கம் (28/04/2013): “அவளுக்கு முழுமையான தாம்பத்தியத்தின் அர்த்தம் புரியவில்லையா?”

அன்பு சகோதரிக்கு— தற்சமயம், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் நான். அலுவல் நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்வேன். வேலையில் இருக்கும்போது ஓய்வே கிடையாது எனலாம். ஒரு நாளைக்கு, குறைந்தது பத்து மணி நேரமாவது வீட்டிற்கு வெளியே செலவிட வேண்டியிருக்கும். விடுமுறை நாட்களிலும் ஓய்வு கிடையாது. வேலையின் தன்மை அப்படி. எனக்கு எந்த கெட்ட பழக் கமும் கிடையாது; எல்லாரும் பாரா ட்டும்படி அமைதியாக வாழ்ந்து கொ ண்டிருந்தது என் குடும்பம். பள்ளிப்பருவம் எட்டாத சிறு குழந் தைகள்; அழகான மனைவி. அமை தியான என் மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்படும்படி சில நிகழ்வு கள்... யாராவது வீட்டிற்கு வந்தால், எனக்குத் தெரியாத கோணத்தில் நின்று, அவர்களை நோட்டம் விடுவாள் என் மனைவி. நாள் செல்லச் செல்ல, நான் இல்லாத நேரத்திலும், (more…)

அன்புடன் அந்தரங்கம் (21/04/2013): உன் கணவரும், அவளும் ஒரு படுக்கையறையில் . . .

அன்புள்ள அம்மாவிற்கு — நான் 24 வயது பட்டதாரி பெண். என் மாமா வேறொரு பெண்ணை விரும்பி, பெற்றவர்களின் விருப்ப ப்படியும், என் பிடிவாத குணத்தா லும் அவருடைய அக்கா பெண் ணான என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கல்யாணத்திற்குமுன் என்னிடம், தான் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினார். ஆனால், அவர் மேல் உள்ள நம்பிக்கை யில் நான் அதை மறுத்து, "உங்களைத் தான் திருமணம் செய்து கொள் வேன்' என்று சொல்லிவிட்டேன். என் கணவர், வெளியூரில் கல்லூரி யில் வேலை பார்ப்பவர்; அவரிடம் (more…)