
A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
A.D. கண்டிசன் பட்டா - அப்படின்னா என்னங்க
இந்த ஏ.டி கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதி திராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதி திராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பார்.
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி, பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார். அப்படி ஒப்படை செய்யும் போது, கொடுக்கும் பட்டா ஏ.டி கண்டிசன் பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இ