Sunday, November 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை கைதிகளை . . .

டெல்லி : ஆயுள் தண்டனை கைதிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கும் மத்திய அரசின் புதிய முடிவால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்துக்கள் தற்போது மேலோங்கி வருகின்றன. இதன் காரணமாக இந்திய அரசும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அந்தத் தண்டனையை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தூக்குத்தண்டனையை ரத்து செய்துவிட்டு, அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்கும் புதிய சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு தற்போது தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் இருந்துவரும் நளினி, முருகன் உள்ளிட்டோர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும் என்பதால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.