வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அதிக பட்சமாக பரங்கிப் பேட்டையில் 22 செ.மீ., மழை கொட்டியது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மூலம், பல கட்டங்களாக மழை கிடைத்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் இலங்