
தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்
தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்
மனிதனாக பிறந்த எவரானாலும் அவரது வாழ்க்கையில் சோதனை என்பது உண்டு. ஏழை பணக்காரன் ஆத்திகன் நாத்திகன் பகவத் உபன்யாசகர் அத்யாபகர் சன்யாசி ஆசாரியர்கள் ஏன் அந்த பகவானே மனிதனாக பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு. அதை வெல்வது எப்படி என்பதே நமக்கான நோக்கம் அதற்க்கு தேவை நம்பிக்கையான பகவத் பக்தி.
இராவண வதம் முடிந்து வந்து அநோத்தி ராஜாவாக பட்டா பிஷேகம் ஏற்றுகொண்ட ராமனின் ராஜ்ஜியத்தில் மக்கள் எல்லோரும் ஆனந்தமயமாக ராமனை போற்றியும் ராம நாமாவை உச்சரித்தும் பேரானந்தமாக வாழ்ந்து வந்தனர் அப்படியான ராம ராஜ்யத்தில் ஒரு நாள் துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் அயோத்தி எழுந்தருளி அரண்மனைக்கு ஶ்ரீ ராமனை காண வந்தார். துர்வாச மாமுனிவர் அயோத்தி வந்துள்ளதை அறிந்த மக்கள் மற்றும் ஶ்ரீராமனின் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயங்கலந்த