Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இருவரையும்

கணவன்-மனைவி இருவரையும் ஒரேபாடையில் . . .

பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரை சாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக் கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.    இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது.   பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார்.   70 ஆண்டுகளுக்கு (more…)

அகற்றுங்கள் இருவரையும்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் மாற்றுக் கருத்துக்கும் மரியாதை அளிப்பது என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப் படையே. மன்னராட்சியிலும், சர்வாதி கார ஆட்சியிலும், ராணுவ ஆட்சியிலும் போலல்லாமல் மக்க ளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவை யில் பெரும்பான்மை நம்பிக்கை பெற்ற ஒருவரைத் தேர்ந் தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் வழிமுறை. அப்படி அமையும் ஆட்சி, குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரின் ஆட்சி என்றுதான் அழைக்கப்படும். அதுதான் மரபு.  கர்நாடக மாநிலத்தில் நடக்கும் அரசியல் கூத்துகள், நமது அரசியல் வாதிகள் எந்த அளவுக்குப் பதவிப் பித்துப் பிடித்து அலைகிறார்கள் என்பதையும், அரசியல் சட்ட அமைப்புகள் எப்படியெல்லாம் முறை கேடாகப் பயன் படுத்தப்படுகின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டு கின்றன. மக்களால் நல்லாட்சி தருவதற்காகத் (more&hellip