
முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல் தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன் யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை.
பல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்து விடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும்கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இருக்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம் ஏன்? முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்?
உளவியல் ஆலோசகர் பாபு பேசுகிறார்.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந