
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு
ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.
இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது