வாரணாசியில் குண்டு வெடிப்பு: 20 பேர் படுகாயம்: முக்கிய நகரங்களில் தீவிர பாதுகாப்புக்கு உத்தரவு
காசி கங்கையாற்றில் வழிபாட்டிற்காக, குழுமியிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள புனித நகரமான காசியில், ஷீத்தல காட் அருகே, கங்கையாற்றில், "கங்கா ஆர்த்தி' வழிபாடு நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை நேரத்தில் திரண்டு இருந்தனர். இதை பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரண்டு இருந்தனர். மாலை 6.30 மணிக்கு பக்தர்கள் வழிபாட்டில் மும்முரமாக இருந்த போது, திடீரென குண்டு வெடித்தது. குண்டு சத்தத்தை கேட்டு பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால், சிலர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். குண்டு வெடிப்பில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சில வெளிநாட்டு பயணிகளும் அடங்கிய