Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஊழியர்

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)   (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                               (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ

சட்ட‍விரோதம் – I.T. ஊழியர்களை இனி காரணமின்றி வேலையை விட்டு நீக்கினால் – புது தகவல்

சட்ட‍விரோதம் - ஐ.டி.(IT) ஊழியர்களை இனி காரணமின்றி வேலையை விட்டு நீக்கினால்... - புது தகவல் இனி ஐ.டி. (Information Technology - IT ) ஊழியர்களை  காரணமின்றி வேலையை விட்டு நீக்கமுடியாது, எப்.ஐடிஈ என்ற (more…)

மருத்துவ காப்பீடு "பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ள து. இது, அரசு ஊழியர்கள் மத்தியி ல், பெரும் அதிர்ச்சியையும், அதிருப் தியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக் கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படு கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன் ஸ்' நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறு ம், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், (more…)

அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத சம்பள உயர்வு

சென்னை : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கான சிறப்புப் படியும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைக்காமலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு, "லக்' அடித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வந்துள்ள தமிழக அரசு, புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்தியதோடு, அந்த சம்பளத்தில் இருந்த முரண்பாடுகளையும் நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது. இதே போல, இந்த ஆண்டு துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதும், எந்த சங்கமும் கோரிக்கை வைக்காமலேயே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரச