Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எச்சரிக்கை

ஆபத்து கணனிகளுக்கு… :மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவ னம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணி யிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவர ங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளி யிட்டுள்ளது. புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின் டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற் றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய (more…)

காங்கிரஸ் எச்சரிக்கை: கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் . . . .

கர்நாடகத்தில் முழு அடைப்பு காரணமாக சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா எச்சரிக்கை விடுத்து உள்ளார். கர் நாடக சட்டசபை எதிர்க் கட்சி தலைவர் (காங் கிரஸ்) சித்த ராமையா, நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறிய தாவது:- நிலமுறைகேடு புகார் தொடர்பாக வக்கீல்கள் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட கவர்னர், முதல்- மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரி அசோக் ஆகியோர்மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டது. கவர்னர் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து உள்ளார். அடுத்த கட்டமாக கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்கும். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக பா.ஜனதாவினர் மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.  இது (more…)

மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8 பயன்படுத்து பவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாது காப்பற்ற கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி எளிதாக அந்த கம்ப்யூட்டர் களின் செயல் பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியுள்ளது. இவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களு க்குப் பலவித ஆசை காட்டி, ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள இணைய தளத்திற்கான தொடர்பில் கிளிக் செய்திடத் தூண்டு கின்றனர். அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் உள்ள பிழைவழிகளைப் (more…)

பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தமிழக பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இலங்கையில், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டை, கடந்த ஆண்டு ஓய்ந்தது. புலித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால், அந்த இயக்கம் வலு விழந்து விட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகவும், உஷார் நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய உளவுத்துறை மூலம், தமிழக காவல் துறைக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுத்துறையிடம் மேலும்   (more…)

ஆன்லைன் ஷாப்பிங் – சில எச்சரிக்கைகள்

விடுமுறை காலம் நெருங்குகிறது. புத்தாண்டு தொடங்க இருக்கிறது. பொங்கல் வர  இருக்கிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.  இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட,  இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக (more…)

தேசிய கீதத்தை அவமதித்தேனா? நானா? இல்லை இல்லை என்கிறார் – சவான்

மும்பை தாக்குதல் நடந்த 2வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான், தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்ற சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இச்செயல் தேசிய கீதத்தை அவமித்த செயல் என்றுகூறி  பா.ஜ.க.வினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதுகுறித்து பிருதிவிராஜ் சவான் அளித்துள்ள விளக்கத்தில், நிகழ்ச்சியின்போது  தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது தனக்கு கேட்கவில்‌லை என்றும், தேசியகீதம் கேட்டவுடன் நான் அந்த இடத்திலேயே நின்று விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் பிருதிவிராஜ் சவான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க‌, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன•

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பை போலீசார், போர்ஸ் ஒன் படையினர் மற்றும் குவிக் ரெஸ்பார்ன்ஸ் படையினர் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரைன் டிரைவ் டிரைடன்ட் ஓட்டல் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, ‌தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் முடிவடைகிறது. போரிவிலி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செஞத்தினார். மும்பையில் 2008 நவம்பர் 26-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்திய கமாண்டோப்படையினர் அதிரடியாக செயல்பட்டதில் பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெறும் அமைதிப் பேரணியில்

மும்பை தாக்குதல் எச்சரிக்கை குறித்து அமெரிக்கா

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி குறித்து தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்கா தயக்கம் காட்டுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு முன்பிருந்தே பயங்கரவாத செயல்கள் குறித்த எச்சரிக்கையை தாங்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு வழங்கி வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அயோத்தி தீர்ப்பால் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கை, உஷார் நிலையில் போலீசார் . . .

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் இன்று வழங்குகிறது. இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக நாடே, லக்னோவை நோக்கி திரும்பியுள்ளது. நீதிபதி எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த தீர்ப்பு வருவதையொட்டி லக்னோ, அயோத்தி நகரங்களை மையமாக வைத்து, உ.பி., முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க லக்னோ, அயோத்தி