"என் கதையான, "ரோபாட் தொழிற்சாலையை, "எந்திரன் படமாக வெளியிட்ட இயக்குனர் சங்கர் மீதும், துணையாக இருந்தவர்கள் மீதும் காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என எழுத்தாளர் ஆர்னிகா நாசர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
டைரக்டர் ஷங்கர் இயக்கிய, "எந்திரன் படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று புலனாய்வு பத்திரிகை துணை ஆசிரியரான அமுதா தமிழ்நாடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். இந்நிலையில், எழுத்தாளர் ஆர்னிகா நாசர், நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது:
நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, "ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெ