அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம்.
நான், 36 வயது இளம் விதவை. நான்கு மகன்களுக்கு தாய். என் வாழ்வில், 9ம் வகுப்பு படிக்கு ம் வரை தான், மகிழ்ச்சி என்ப தே இருந்தது. அதன்பின் நட ந்தது எல்லாமே சோக மயம் தான். நான், 9ம் வகுப்பு படிக் கும்போது, என்மீது அன்பு செ லுத்திய, என் அருமை அப்பா, விபத்தில் இறந்து விட்டார். நிறைய படித்து, உயர் அதிகா ரியாக வரவேண்டும் என்று கனவு கண்டிருந்த எனக்கு, அம்மாவின் அடாவடித்தனத் தால், 10ம் வகுப்பு முடித்தது மே, சரியாக விசாரிக்காமல் குடிப் பழக்கமும், நிரந்தர வே லையும் இல்லாத ஒருவருட ன் திருமணம் நடந்து, சென்னை வந்து சேர்ந்தேன்.
வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாத பருவத்தில், திருமணம் என்ற போர்வையில் தள்ளி, பாழும் கிணற்றில் விழுந்த எனக்கு, கணவனின் அன்பு கிடைக்காத நிலையில், தொடர்ந்து அம்மாவின் அடிமையாகவே இருந்தேன். குழந்தை பெற்றுக் கொள்வதை கூட, என் தாயும், மாமியாரும