அன்புடன் அந்தரங்கம் (10/03/13): “என் கழுத்தில் தாலி ஏறும்வரைதான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு.
அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு —
முகம் பார்த்திடாத மகளின் பிரச்னைக்கு தீர்வு அளிப்பீரா? நான் ஒரு ஆசிரியை. என் கணவரும் ஆசிரியர் தான். எனக்கு ஒரு ஆண் குழந் தை இரண்டரை வயதில் உள்ளது. மணமாகி மூன்றரை ஆண்டுகள் கூட ஆகவில்லை. இருவருக்கும் சமமான படிப்பு, பதவி இருந்தும், ஒரு பாவையின் சூதினால் நான் பாதி வழியில் பரிதவித்து நிற்கி றேன். அந்தப் பாவையும் ஒரு ஆசிரியை தான்.
என் கணவரும், அவரது குடும்பத்தின ரும் என்னை பெண் பார்த்து, "பூ' வைத்த பின், ஆறு மாதங்களுக்கு பிறகு தான் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன், என் பணி மாறுதலு க்காக அவர் அதிக முயற்சி செய்தார். அதன் பலனாக, திருமணத்துக் கு ஒரு மாதம் இருக்கையில், (more…)