Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எரிச்சல்

அன்புடன் அந்தரங்கம் (03/06): "உன் மகன்களின் ஒப்புதலோடு, மறுமணம் செய்து கொள்"

  அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம். நான், 36 வயது இளம் விதவை. நான்கு மகன்களுக்கு தாய். என் வாழ்வில், 9ம் வகுப்பு படிக்கு ம் வரை தான், மகிழ்ச்சி என்ப தே இருந்தது. அதன்பின் நட ந்தது எல்லாமே சோக மயம் தான். நான், 9ம் வகுப்பு படிக் கும்போது, என்மீது அன்பு செ லுத்திய, என் அருமை அப்பா, விபத்தில் இறந்து விட்டார். நிறைய படித்து, உயர் அதிகா ரியாக வரவேண்டும் என்று கனவு கண்டிருந்த எனக்கு, அம்மாவின் அடாவடித்தனத் தால், 10ம் வகுப்பு முடித்தது மே, சரியாக விசாரிக்காமல் குடிப் பழக்கமும், நிரந்தர வே லையும் இல்லாத ஒருவருட ன் திருமணம் நடந்து, சென்னை வந்து சேர்ந்தேன். வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாத பருவத்தில், திருமணம் என்ற போர்வையில் தள்ளி, பாழும் கிணற்றில் விழுந்த எனக்கு, கணவனின் அன்பு கிடைக்காத நிலையில், தொடர்ந்து அம்மாவின் அடிமையாகவே இருந்தேன். குழந்தை பெற்றுக் கொள்வதை கூட, என் தாயும், மாமியாரும

அன்புடன் அந்தரங்கம் (27/05) – "என் தப்பை நீ கண்டுகொள்ளாதே, உன் தப்பை நான் கண்டு கொள்ள மாட்டேன்…'

  அன்புள்ள சகோதரிக்கு — எனக்கு வயது, 50. அரசாங்க அதிகாரியாக பணியாற்றுகிறேன். என் மனைவி வயது, 48 அர” பணியி ல் இருக்கிறாள். எங்களுக்கு, இர ண்டு பெண்கள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. என்னு டைய மனைவி போல் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள். சற்று குள்ளமாக, சாதாரணமாக இருந்தாலும், எனக்கு அடுத்த பிறவியிலேயும், அவளே மனை வியாக அமைய வேண்டும். அமைதியானவள். யாரிடமும் (உறவினர் உட்பட) அதிகமாக பேச மாட்டாள். கணவன் சொல் வதே மந்திரம். கணவனுக்கு உப சரணை செய்வதில், ஈடு இணை யே இல்லை. அப்படி இருந்தும், ஒரு பிரச்னை. பஸ்சில் செல்லும் போது, யாராவது இடித் தாலோ, உரசினாலோ அதை தடுக்காமல், நான் அதை பார்க்கிறேனோ என பார்ப்பாள். தன்னை மறுபடியும், மறுபடியும் பார்க்கும் ஆண்களை, இவளும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (20/05): வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் . . . ??!!.

  மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள். எங்க ள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய் து வைத்தனர் என் பெற்றோ ர். எனக்கு இரண்டு குழந்தை . ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவா ன சொற்களால், என்னை காயப்படுத்துவார். அதையும், நான் தாங்கிக் கொண்டேன், என் குழந்தைக்காகவும், என் பெற்றோருக்காகவும்.என் வாழ்க்கை யில், நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று, என் வாழ்வில், நான்கு வருடங்களுக்கு முன், என்னை காதலிப்பதாக, ஒருவர் கூறினார். நான் அதை பொருட்படுத்தாமல், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டேன். அவர் வேறு யாரும் இல்லை, என் தங்கை கணவர். என் னை இரண்டு வருடமாக காதலிப்பதாகக் கூறினார். அவர் வயது, 28 என்னுடன் நெருங

அன்புடன் அந்தரங்கம் (13/05):மீண்டும் நான் மறுத்தால், தற்கொலை செய்வேன்

அன்புள்ள அம்மாவுக்கு— மிகுந்த மனகுழப்பத்தில் தவிக்கும் எனக்கு, உங்கள் பதில், நல்ல தீர்வு தரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நான் அரசு ஊழியன். வயது, 29. உடன் பிறந்தவர்கள், நான்கு பேர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கு ம் போது, உடன்படித்தவளை உயிராக நேசித்தேன்; அவளு ம் தான். திடீரென சாலை விபத்தில், அவள் இறந்து விட, அவளை மறக்க முடி யாமல், இதுவரை திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பனின் தங்கை மூலமாக, அவளி ன் தோழி அறிமுகமானாள். அவள் படிப்பில் முதல் மாணவி. அவள் தந்தை, மத்திய அரசில் உயர் பதவியில் இருக்கிறார். அறிமுகம் ஆகும் போது, அவள் பத்தாம் வகுப்பு படித்தாள். நல்ல நண்பர்களாக பழகினோம். தினமும் குறுந்தகவல் அனுப்புவாள். சில சமயங்களில் வீட்டில் போ ரடித்தால், என்னுடன், எஸ்.எம்.எஸ்., மூலமாக சாட் செய்வாள். நான் எல்லாரிடமும் மி

அன்புடன் அந்தரங்கம் (06/05): மன்னிக்க முடியாத சில தவறுகளை செய்த நீயும், உன் கணவனும்,

அன்புள்ள அம்மாவுக்கு — நான், நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த, 40 வயது பெண். சின்ன வயதில், என் அப்பா வின் நடவடிக்கைகளால், அம்மாபட்ட கஷ்டத்தை பார் த்து பார்த்து, அன்பிற்கு ஏங்கி வளர்ந்தேன். பட்டப்படிப்பு படி க்க ஆசைப்பட்டேன். ஆனால் , வீட்டுச் சூழ்நிலையால், திடீரென்று வந்த மாப்பிள் ளைக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர். அம்மா... நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், என் அம்மா தற் கொலை செய்து விடுவார் என பயந்து, என் தாய் சொன்ன மாப்பிள்ளையை, கரம் பிடித்தேன். எனக்கு திருமணமாகி, 23 வருடங்களாகின்றன. வயது வந்த மகன் கள் இருவர் உள்ளனர். என் கணவருக்கு, ஆரம்ப காலத்திலிருந்தே, என்மீது எந்தவிதமான அன்போ, பிடிப்போ, பாசமோ, மனைவி என்ற எண்ணமோ துளியும் இல்லை. இடையில், என் கணவரின் இந்த பாராமுக நடவடிக்கையால் மனம் வெறுத்து, மன்னிக்க முடியாத சில தவறுகளைச் செய்தேன். என் கணவரும், பதிலுக்கு, எனக்கு மேல் தவறுகளைச் செய்தார்.

அன்புடன் அந்தரங்கம் (29/04): காதலியின் வீட்டாரை சமாதானப்படுத்த, உன் மனைவியை தூது அனுப்பியிருக்கிறாய்!

அன்புள்ள அம்மா — நான் கலப்புத் திருமணம் செய்தவன். நான் தாழ்ந்த ஜாதி; என் மனைவி உயர்ந்த ஜாதி. எனக்கு வயது 36. என் மனைவிக்கு வயது 30. எனக்கு இரண்டு பிள் ளைகள். முதல் பெண், வயது 7. இரண்டாவது ஆண், வயது 4. மகள் 2ம் வகுப்பு; மகன் எல். கே.ஜி., படிக்கின்றனர். அம்மா, நாங்கள் திரு மணம் செய்து, 14 வரு டங்கள் ஆகின்றன. பதி வுத் திருமணம் செய்துள்ளோம். கடந்த, 13 வருடங்களாக, எந்த ஒரு சிறு பிரச்னை கூட இல்லாமல், வாழ்க்கை நடத்தினோம். ஆனால், கடந்த ஒரு வருடமாக, பிரச்னை செய்கிறாள் என் மனைவி. திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள், சொந்த (more…)

அன்புடன் அந்தரங்கம் (22/04): “எல்லா ஆண்களும் விஷப் பாம்புகளே!”

அன்புள்ள அம்மாவுக்கு — எனக்கு, வயது: 30. திருமணமாகி, 10 வருட ங்கள் ஆகிறது. எனக்கு, இரண்டு குழந்தை கள் உள்ளனர். என் கணவர் தங்கமான வர். என் மேல் உயிரையே வைத்திருக் கிறார்; நானும் அப்படித் தான்; அவர் மேல் உயிரையே வைத்திருக் கிறேன். கடந்த மூன்றா ண்டுகளாக, ஒரு ஜெரா க்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறேன். ஆறு மாதத்திற்கு முன், என் கடை முதலாளி, என்னை பார்த்து, "உன் னை எனக்கு பிடித்திருக்கிறது. தவறாக நினைக்க வேண்டாம். உன் அன்புதான் எனக்கு வேண்டும். மற்றபடி, நீ உன் குடும்பத்தை பார்த் துக் கொள், நான், என் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். ஆனா ல், உன் அன்பு எனக்கு கண்டிப்பாக வேண்டும்...' என்றார்; எனக்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (15/04) இனக்கவர்ச்சியில் விழுந்த நீ . . .

அன்புள்ள அம்மாவுக்கு — வாழ்வில் முக்கியமா ன முடிவு எடுக்க முடி யாமல், தவித்துக் கொ ண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன். நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/04) காதல் தப்பில்லை; ஆனால், காதல் என்ற சாக்கில், காம தகனத்தில் ஈடுபடுவதுதான் தப்பு

அன்புள்ள அம்மாவுக்கு— எனக்கு வயது 22. நான் நாகர்கோவிலில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். என க்கும், அதே கடையில் வேலை பார்த்த ஒரு வருக்கும் காதல் இருந்தது. இருவரும் தனிமையில் நெருக்க மாக இருந்தோம். இ தை, கடையில் இருந்த சில பணியாட்கள் பார்த்தனர்; ஆனால், முதலாளியிடம் சொ ல்லவில்லை. காரண ம், பார்த்த நபர்களிடம் நான் வருத்தப்பட்டு பேசினேன். இந்நிலை யில், இந்த விஷயத் தை, முதலாளியிடம் யாரோ சொல்லி விட் டனர். என்னை , என் அத்தை மகனுக்கு பேசி முடித்து வைத்தனர். எனக்கு வேலை போய் விட்டது. என்னுடன் நெருக்கமாக இருந்த நபர் மட்டும் அதே கடையில் வேலை பார்க்கிறான். தண்டனை என க்கு மட்டும் தானா... அவனுக்கு இல்லையா? இறுதியில், என் அத் தை மகன் என்னை (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/04) ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் அண்ணன் – தங்கைகள் என்பது நம்பிக்கை

அன்புள்ள அம்மா அவர்களுக்கு — நான், 22 வயது பெண். நான் ஒருவரை விரும்புகிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். நாங்கள், ஐந்து வருடங்க ளாக காதலித்துக் கொண்டி ருக்கிறோம். எங்கள் பெற் றோர், காதலுக்கு தடை சொல் பவர்கள் அல்ல. என் பெற்றோருக்கு நான் காத லிப்பவரை பிடிக்கும். அதே போல், அவர்கள் வீட்டிலும் என்னை பிடிக் கும். நான் முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் படிப்பை முடித்து, ஜூனி யர் கெமிஸ்ட்டாக தனி யார் கம்பெனியில் வேலை செய்கிறார். எங்களின் திருமணத்திற்கு தடையாக இருப்பது சமுதாயம். நம் சமுதாயத்தில், சில ஜாதிகளில், ஒரே குலத்தில் பிறந்த ஆணும், பெண்ணும், அண்ணன் - தங்கை என்றும், அதனால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும் வழக்கம் இருக்கிறது. இதுதான் என் பிரச்னை. நாங்கள் இருவரும் மிகவும் தூரத்து உறவினர்கள் என்றாலும் ஒரே குலம் என்பதால், (more…)

அன்புடன் அந்தரங்கம் (25/03) – ஈகோவை சாக்கிட்டு, எந்த கணவன் – மனைவியும் பிரிந்து விடக் கூடாதென்பதே என் பதைபதைப்பு

அன்புள்ள சகோதரிக்கு— உடன்பிறவா சகோதரன் எழுதிக் கொள்வது. எந்த கெட்டப்பழக்கமு ம்  இல்லாதவன். என் வயது54. 12 ம் வகுப்பு வரை படித்தவன். எனக் கு கல்யாணமாகி, 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பையன், கல்லூரியி ல் படிக்கிறான். என் மனைவி அதி கம் படிக்காதவள். சாதாரண குடும் பத்தை சேர்ந்தவள். ஜாதகப் பொரு த்தம் பார்க்காமல் தான் கல்யா ணம் செய்து கொண்டேன். காரணம், நான் இதற்கு முன் பார் த்த வரன்களில், ஜாதகம் சேர்ந்து இருந்தால், பெண்ணை பிடிக்கா மல் இருக்கும்; எனக்கு பிடித்திருந்தால் ஜாதகம் சேராது. எனவே, ஜாதகம் பார்க்க வேண்டாம், கடவுளிடம் பூ போட்டால் போதும் எனக் கூறி விட்டேன்; அவர்களும் ஒப்புக்கொண்டனர். எனக்கும், அவளை பிடித்திருந்தது; அவளுக்கும், என்னை பிடித்ததாகக் கூறி னாள். எங்களது திருமணம் ஒரே மாதத்தில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (18/03) – முதல் திருமணம் வெற்றி பெறும் அளவிற்கு, இரண்டாவது திருமணம் வெற்றி பெறுவதில்லை

    மேன்மை மிகு அம்மாவுக்கு — தங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. நவ., 21, 2001ல் தொலைந்து போன என் வாழ்க்கைக்கு, எங்கு தேடியு ம் பலன் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தங்களால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அம்மா... நான் திருமணம் செய்திருப்பது, என் அம்மாவி ன் அண்ணன் மகளைத்தான். எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ஆங்கில இலக்கியம் படித்து, அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். நான் டிப்ளமோ முடித்து, ஒரு டிராக்டர் கம்பெனியில், பார்ம் எக்சிகியூட் டிவாக வேலை செய்கிறேன். பணத்திற்கோ, பண்பிற்கோ, பாசத்திற் கோ இறைவன் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தில் எல்லாரிடமும் அதிகமான பாசம் வைத்திருப்பது நான் மட்டும்தான். அதே போல், பெரியவர் முதல், சின்னக் குழந்தை வரை பாசம் வைத்திருப்பது என்னிடம் மட்டும்தான். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், எல்லாரும் துடித்துப் போவர். எனக்கு ப