தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. புதிய டி.ஜி.பி., நியமிக்கும் வரை, பதவியில் லத்திகா சரண் தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், டி.ஜி.பி., நடராஜ் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடராஜ் மனு தாக்கல் செய்தார்.அதில், "எனது சீனியாரிட்டியை புறக்கணித்து விட்டு, டி.ஜி.பி.,யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகள், டி.ஜி.பி., நியமனத்தில் பின்பற்றப்படவில்லை. எனவே, லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை பின்பற்றி, டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது