
ஒரு நடிகையின் அதிரடி முடிவு
ஒரு நடிகையின் அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடக்கத்தில் இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்து அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.
அதன்பிறகு அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாட வா, அட்டகத்தி, ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, காதலை, பறந்து செல்ல வா, ஜோமொண்டே சுவிசேசங்கள், முப்பரிமாணம், கட்டப்பாவ காணோம், சகவு, ஜெமினிகணேசனு