Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஒதுக்கீடு

பெரும் துயரில் கருணாநிதி

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி "ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)

கனிமொழி கைதும் திமுகவின் அமைதியும்

ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அள வில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங் கினால் கட்சியின் பெயர் மே லும் கெட்டு விடும் என்பதா லும், காங்கிரஸ் மேலும் அதி ருப்தியாகி, கனிமொழி யை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்ப தாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகி றது. திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்ட போது (more…)

கனிமொழி கைது: தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர் ட்டில் கனிமொழி ஆஜரா னார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன் று) ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொ ழியின் முன் ஜாமீன் மனு வை தள்ளுபடி செய்து நீதி பதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக் காட் சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப் பட்டு டெல்லியில் உள்ள (more…)

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி: கனிமொழி கைது;

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனி மொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற் றம் சுமத்தப்பட்டி ருந்தது.  ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் (more…)

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரவு ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இடையே கையெ ழுத்தானது. அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணியை உறுதி ப் படுத்தும் வகையில், கடந்த 24ம் தேதி அ.தி.மு.க., தலைமை அலு வலகத்தில் அக்கட்சியின் தொ குதி பங்கீடு குழுவினருடன், தே. மு .தி.க., தொகுதி பங்கீட்டு குழு வினர் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். "தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, (more…)

திமுக கூட்டணியில் பாமக: 31 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் . . .

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் தரப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு 31 இடங்க ளை ஒதுக் கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. மேலும் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என்று திமுக உறுதி யளி த்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே 31 இடங் களும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் பாமகவுக்கு திமுக வழங் கியது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை ஆகிய முக் கிய கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் (more…)

22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி

ஸ்பெக்ட்ரம் மோசடி சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தராததால் வருகிற டிசம்பர் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக இன்று சரத் யாதவ் தெரிவித்தார். இது குறித்து சரத் யாதவ் கூறியதாவது:- டிசம்பர் 22-ந்தேதி டெல்லியில் ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக மாபெரும் பேரணி நடத்தப் போகிறோம். இப்பேரணி தேசிய ஜனநாயக கூட்டணியின் பேரணியாக இல்லாமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பேரணியாக இருக்கும் எனக் கூறினார். இடதுசாரிகள் பேரணியில் பங்கேற்பார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு சரத் யாதவ் பதிலளிக்க மறுத்தார். நாடாளுமன்ற கூட்டத்தின் இறுதி நாளான டிசம்பர் 13-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்தி அனைத்து கட்சியினரிடமும் நாங்கள் பேசுவோம் என்றும், இடதுசாரிகள் இதில் கலந்து

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . . .

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் வி. பாட்டீலை ஒருநபர் குழுவாக மத்திய அரசு நியமித்துள்ளது. 2001-09 காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் அனுமதி வழங்கப்பட்டதில் தொலைத்தொடர்புத் துறையால் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை இந்த குழு ஆய்வுசெய்யும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒருநபர் குழுவின் அறிக்கை வந்த பின்னர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஏலமுறை குறித்து முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அடுத்தகட்டத்துக்கு செல்லும்போது, எது சிறந்த நடைமுறை என்பது குறித்து அனைத்து பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவோம் என கபில் சிபல் பதிலளித்தார். தொலைத்தொடர்புத் துறையின் எந்தவொரு அதிகாரியையும் விசாரணைக்கு அழைக்க இந்த குழுவுக்கு

அதிபர் ஒபாமா உறுதி: கல்விக்கான நிதி ஒதுக்கீடு

"கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க முடியாது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசியதாவது:பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில், 20 சதவீதம் குறைக்கும் படி எதிர்க்கட்சியினர் வற்புறுத்துகின்றனர். கல்வியில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேறியுள்ளன. அந்த நாடுகள், கல்விக்கான ஒதுக்கீட்டை குறைப்பதில்லை.நாம் கல்வியில் உலகத்தில் முதலிடத்தை வகிக்க வேண்டும். இரண்டாம் இடத்துக்கு சென்று விடக்கூடாது. எனவே, கல்வி ஒதுக்கீட்டு நிதியை குறைக்க முடியாது. இதனால், புதிய கல்லூரிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளோம்.அதே போல மாணவர்களுக்கும் கல்வி கட்டண சலுகை அளித்துள்ளோம். சிறு தொழில் செய்பவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடையாது.இவ்வாறு ஒபாமா பேசினார்.