நர்சிங் படிப்பில் சேர விரும்பிய கிராமப்புற மாணவ, மாணவியருக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து, சேர்த்து விட்ட, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உள்ளிட்ட இருவரை,சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில், 2006-07, 2007-08, 2009-10ம் கல்வியாண்டுகளில் செவிலியர் பயிற்சியில் சேர்ந்தவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 36 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து,சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிவபாலன் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்களை அடுத்து, போலி கல்வி சான்றிதழ் தயாரித்து வழங்கிய, ஆரணி, கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சம்பத் (62) மற்றும் வேலூரை