
மாதவிடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால்
மாத விடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால்
கம்பங்கூழை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்கள் எங்கே? கொளுத்தும் வெயிலில் செயற்கை குளிர்பானத்தை பெருமையாக குடித்து உடலை கெடுத்துக்கொள்ளும் நாம் எங்கே?
கம்பங்க்கூழை குடித்து வந்தால் உண்டாகும் ஆரோக்கிய பலன்கள் எண்ணற்றவை அதில் ஒன்றுதான் இந்த உடல் வெப்பத்தை தணிப்பது. குறிப்பாக பெண்கள் தங்களது மாதவிடாய் நாட்களில் இந்த கம்பங்கூழை குடித்து வர வேண்டும். இந்த கம்பங்கூழில் மெக்னீசியம் மிகுந்த காணப்படுவதால், பெண்கள், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அடி வயிற்று வலி , மற்றும் வயிற்று பிடிப்பு குணமாவதோடு அவர்களின் உடல் சூட்டையும் தணிக்கிறது. இதனால் உடல் சோர்வு தானாக நீங்கி உடலில் புத்துணர்ச்சி மேலோங்கும். ஆகவே பெண்கள், தங்களது மாதவிடாய் நாட்களில் இந்த கம்பங்கூழை குடித்து வலியில்லா மாதவிடாயாக இருக்கட்டும்.
#கம்பு, #கூழ், #கம்பங்கூ