
நெய் தடவுங்க அது நல்லது
நெய் தடவுங்க அது நல்லது
தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. சரியான தூக்கம் இல்லை. மன அமைதி இல்லை எந்நேரமும் மன அழுத்தம், மேலும் வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் மன சோர்வு ஆகியவற்றால் சில ஆரோக்கியகேடுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு கீழே கருவளையம். இந்த கருவளையத்தை போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு.
கவர்ச்சியான கண்களுக்கு கீழே கருவளையம் வந்துவிட்டால் அது கண்களின் அழகை கெடுத்து விடும். அதுபோன்ற நேரங்களில் இரவு தோறும் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு கண்களைச் சுற்றி நெய் சிறிது எடுத்து தடவி வாங்க• அப்புறம் பாருங்க, கருவளையத்தால் அழகை இழந்த உங்கள் கண்கள், பளிச்சிடும், பளபளக்கும், கவர்ச்சியாகும்.
#நெய், #கருவளையம், #கண், #கண்கள், #மன_ஆழுத்தம், #தூக்கமின்மை, #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Ghee, #Black_Circle, #Eye,