
கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு
கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு
அழகின் மறுபெயர் மங்கை. மங்கையின் மறுபெயர் அழகு. இந்த அழகை மங்கயருக்கு அள்ளித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது அவளது கூந்தல்தான். அந்த கூந்தல் கருகருவென்று இருப்பதால் தான் கவிஞர்கள் பலர் கார்மேகக் கூந்தல் என்று வர்ணித்துள்ளனர். அந்த கூந்தல், கருமையிழந்து பொலிவிழந்து விட்டால், அங்கே அழகு என்பது அடிபட்டுவிடும். ஆகவே மங்கையின் கூந்தல் கருகருன்னு மின்ன எளிய குறிப்பு இதோ
ஒரு பாத்திரத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊ்ற்றி அதில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆறியபிறகு கூந்தலில் தடவி வர வேண்டு். இவ்வாறு தினமும் செய்து வந்தால் போதும் அவர்களின் கூந்தல் கருகருவென்று மின்னும். காண்போரின் நெஞ்சத்தை அள்ளும்.
குறிப்புஒவ்வொருமுறையும் கூந்தலுக்கு எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்