Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கற்பு

கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானதா?

கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானதா?

கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானதா? க‌டந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பு குறித்து, பிரபல நடிகை ஒருவர், தெரிவித்த கருத்து, பலத்த சர்ச்சையானதோடு, அந்த நடிகைக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன• இவ்வ‍ளவு ஏன் அந்த நடிகை மீது நீதிமன்றத்தில் பல‌ வழக்குகளும் தொடரப்பட்டன• இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த கற்பு என்பது என்ன என்பதை சுருக்கமாக காண்போம். கற்பு என்பது தூய்மையான காதலோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கருத்தில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, உரித்தானது. ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் செய்து கொண்டு காதலித்தாலும் ஒருவர்மீது ஒருவர் கொண்ட தூய்மையான காதல் என்ற உன்னதமான‌ உணர்வு, இருவரது இதயங்களுக்குள்

கற்பு நெறியில் சிறந்தவர் யார்? கண்ணகியா? மாதவியா? கோப்பெருந்தேவியா?

கவிக்கோ இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோப்பெரு ந்தேவி மற்றும் மாதவி என நாம் 3 கற்பு க் கரகியர்களை காணலாம். இந்த மூவரில் கற்பு நெறியில் சிறந்தவர் யார் என்பதை ஆராயப் போகிறோம். சிலப் பதிகார கற்பு நெறியை 3 வகையாக பிரிக்கலாம், அது முதற்கற்பு, இடைக் கற்பு மற்றும் கடைக்கற்பு ஆகும். கோவலனை மணந்ததால் கண்ணகி அவனது மனைவியானாள். மனைவி என்பவள் கணவனுக்கு கட்டுப்பட்டவ ள். கோவலன் என்ன தவறு செய்தாலும் அதை கண்ணகி பொறுத்து கொள்ளத் தான் வேண்டும். கணவனுக்கு மனைவி கட்டுப் பட்டவளாக, கற்பு நெறி காப்பவளாக (more…)