Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கவிதை

வாழ்க்கை

கேள்விக்குறிகளோடு அமைதியின்றி மனிதர்களும் . . . . ஆச்சர்யக்குறிகளோடு ஆனந்தமாய் குழந்தைகளும்.  . . எழுதியவர் - திருவாளர் கோபால் மனோகர்

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது. பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் (more…)

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன

வேலை வாய்ப்பில் முன்னுரிமையை பெற கூடுதல் திறமை களை நீங்கள் பெற்றிருக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம். உதார ணமாக தாய்மொழி தவிர்த்து ஆங் கிலம், பிரெஞ்சு, சைனீஸ், இந்தி போன்ற மொழிகளை கற்கலாம். கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், சிற ந்த பேச்சாற்றல் போன்ற கூடுதல் திறன்களை நீங் கள் பெற் றிருக்கும் பட்சத்தில், உங்களை தேர்வு செய்ய நிறுவனங்கள் முன்னுரிமை அளிக் கும். இது தவிர புதுமையாக சிந்திக்கும் ஆற்றல், பிரச்னைகளை துணிவுடன் அணுகும் முறை, குழுவாக இணைந்து பணியா ற்ற தேவையான பொறுமையுடன் கூடிய சாமர்த்தியம் ஆகியவையே நிறுவனங்கள் பணியாளர்களிடம் எதிர்பார் க்கும் திறமைகள். இத்தகைய திறமைகளை படிக்கும்போதே வள ர்த்துகொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் ஆலோ சனை தெரிவிக்கின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தா

கைபேசி ( செல்போன் )

கையில் பிடித்துப் பேசிக்கொண்டே போவதானாலிது கைபேசி பையில் பைசா இருந்தால் மட்டும் பேச உதவும் கைபேசி மொய்யாய் அருகிலிருந்தாலும் பொய் சொல்ல உதவும் கைபேசி மெய்யிலிதுபோ லொருசிறுகருவி இனிமேலெங்கும் பேசாது வாயில் வருவன எல்லாவற்றையும் (more…)

சிந்திக்க வேண்டுகிறேன். . . .

கண்பார்த்து சிரிப்பவன் - காரியவாதி காணாமல் சிரிப்பவன் - கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் - கவிஞன் தெரியுமென்று சிரிப்பவன் - பசபசப்பாளன் தெரியாதென்று சிரிப்பவன் - நடிகன் இடம்பார்த்து சிரிப்பவன் - சந்தர்ப்பவாதி இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் - கோமாளி ஓயாமல் சிரிப்பவன் - பைத்தியகாரன் ஓடவிட்டு சிரிப்பவன் - வஞ்சகன் நீதியோடு சிரிப்பவன் - அறிஞ்சன் செயல்கெட்டு சிரிப்பவன் - பச்சோந்தி அருளுக்கு சிரிப்பவன் - ஆண்டி அறியாமல் சிரிப்பவன் - மடையன் மகிமையில் சிரிப்பவன் - மன்னன் மாண்பில் சிரிப்பவன் - பண்பாளன் கொடுக்கும்போது சிரிப்பவன் - சூழ்ச்சிக்காரன் இன்பத்தில் சிரிப்பவன் - ஏமாளி துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன். நன்றி – சஜிதா, (ஓர் இணையத்தில் சஜிதா அவர்கள் எழுதியது )

ந‌ரகம், சொர்க‍ம், ஆசை, வித்து, திலகம்

ந‌ரகம் எங்கே இருக்கிறது மங்கையை ம‌ணந்து பார் -  எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி சொர்க‍ம் எங்கே இருக்கிறது. உனது தள்ளாத வயதிலும் தாயின் மடியே எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி ஆசை கல்லுக்கும் உயிரிருந்தால் மலை உச்சியில் இருக்க‍ ஆசைப்படும் -  எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி வித்து நல்ல‍வனாக நீ இருந்தால், செத்த‍ப்பின்னும் வித்தாவாய் நல் முத்துக்கு . . . . -   எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி திலகம் சகதிக்கு திலகமிட்டுப்பார் சக்தியாக உருமாறும் (சகதி என்ற வார்த்தையில் 'க' என்ற எழுத்துக்கு புள்ளி வைத்துப்பார்) எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி

பு(திர்)துக் கவிதை

வேரில்லா கொடியின் காம்பில்லா ம‌லரின் இதழை கைபடாது பறித்திடவா எனக் கேட்க‌ க‌னம் இல்லா தலைக்கேட்டு த‌னமில்லா த‌னவானும் இணங்க‌ நீரில்லா குளத்தின் நடுவே அனல்காற்றை முன்னிறுத்தி வாய் இல்லாத ஊமைகள் வாழ்த்த‍ கண் இல்லாத‌ குருடர்கள் பார்க்க‍ செவி கேளா செவிடர்கள் கேட்க‌ அறுபடா நூலெடுத்து முடிகள் மூன்று சூடும் வேளையில் பறித்திடுவாய் என்றே பதிலுரைத்தாள் எழுதியவர் ராசகவி ரா சத்தியமூர்த்தி எங்களின் விதை2விருட்சம் (www.vidhai2virutcham.wordpress.com) இணைய தள வாசக பெருமக்க‍ளே! இக்கவிதையை படித்துப்பார்த்து தகுந்த பொருளுரையை அல்ல‍து விளக்க‍வுரை யை vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சலுக்கு தங்களுடைய புகைப்படத் துடன் அனுப்பி வைக் குமாறு கேட்டுக்கொள்கிறோம். சரியான பொருளுரை அல்ல‍து சரி யான சிறந்த விளக்க‍வுரையை தேர்ந்தெடுத்து நமது விதை2விரு ட்சம் (www.vidhai2virutcham.wordpress.co
This is default text for notification bar
This is default text for notification bar